இதைக் கேட்டு நெல்லையில் மட்டும் மாணவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக கூறினர். ஆனால் மெரீனா கடற்கரை, அலங்காநல்லூர், மதுரை தமுக்கம் மைதானம் உள்ளிட்ட பல பகுதிகளில் போராடி வரும் மாணவர்கள் நிரந்தர சட்டம் நிறைவேற்றும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என்று கூறி வருகின்றனர்.
சில தினங்களில் குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி கடற்கரை சாலையில்தான் நடைபெறும். எனவே போராட்டக்குழுவினரை வெளியேற்றும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அனைவரும் கடல் அலை பகுதிக்குள் சென்று இணைந்து அரணாக நின்று கொண்டிருக்கின்றனர்.
போராட்டத்திற்கான
குறிக்கோள் அடையப்பட்டுள்ளதால் கலைந்துசெல்லும்படி இளைஞர்களுக்கு
வேண்டுகோள் விடுத்தார். சட்டம், ஒழுங்கை பேணிக்காக்க அனைவரும் எல்லா
வகையிலும் ஒத்துழைப்பு அளித்ததாக தெரிவித்தார்.<
உறங்கிக்
கொண்டிருந்த மாணவர்கள் எழுந்து அமர்ந்து கலைந்து செல்ல மறுத்தனர். இன்று
காலையிலேயே 5000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதனையடுத்து தனித்தனியாக இருந்த போராட்டக்காரர்கள் பலரும் விவேகானந்தர்
இல்லத்திற்கு எதிரே ஒரே இடத்தில் குவிந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக