திங்கள், 23 ஜனவரி, 2017

ஜல்லிகட்டு போராட்டத்தை ஒத்திவைக்க ஹிப் ஹாப் ஆதி,சிவசேனாதிபதி ,ராஜேஷ் கோரிக்கை

ஜல்லிகட்டு ஆர்வலர்கள் சார்பாக இன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஜல்லிகட்டிற்காக பல ஆண்டுகளாக போராடி வரும் இசையமைப்பாளர் ஆதி, சிவசேனாதிபதி, ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் பேசியதன் சுருக்கம்.
1) ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை திருப்தி அளிக்கிறது.
2) நாளை அல்லது நாளை மறுநாள் தமிழக சட்டமன்றத்தில் ஜல்லிகட்டு சட்டம் நடைபெறும். இந்த சட்டத்தை எதிர்த்து பீட்டா அமைப்பால் மேல்முறையீடு செய்ய முடியாத அளவு, சட்டம் வலுவாக உள்ளது.
3) ஜல்லிகட்டு என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தித் தான் நாங்கள் போராட்டத்தில் கலந்து கொண்டோம். வேறு நோக்கங்கள் எங்களுக்கு கிடையாது.
4) 99 சதவீதம் வெற்றி பெற்றதாக நாங்கள் உணர்வதால், ஜல்லிகட்டை நோக்கமாக கொண்டவர்கள் போராட்டத்தை கைவிடலாம்.
5) ஒரு வேளை மீண்டும் ஜல்லிகட்டிற்கு தடை வந்தால், மார்ச் 31 ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் போராட்டம் நடத்திக் கொள்ளலாம், அதுவரை ஒத்திவையுங்கள்.
6) கோவையில் நடந்த போராட்டத்தில் இஸ்லாமியர்கள் உணவு அளிப்பதை சிலர் எதிர்க்கிறார்கள். இத்தனை நாள் போராட்டம் நல்லபடியாக நடந்தது. இனி பிரச்சனை எழும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால் போராட்டத்தில் இருந்து விலகுகிறோம்.
7) பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரை விமர்சிக்க சொல்லி சிலர் எங்களை வற்புறுத்துகிறார்கள். சிலர் கோவையில் தேசிய கொடியை எரிக்க முயன்றனர். இதனால் இந்த போராட்டத்தில் மதம், அரசியல் நுழைவதாக தெரிவதால் போராட்டத்தில் இருந்து விலகுகிறோம்.
8) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கலைந்து செல்லுங்கள் என சொல்வதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை. நாங்கள் விலகிக் கொள்கிறோம்  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: