திங்கள், 23 ஜனவரி, 2017

நிரந்தர சட்டம், இல்லாவிட்டால் முதல்வர் பதவி விலக வேண்டும்... அலங்காநல்லூர் மக்கள் கிடுக்கிப் பிடி!

மதுரை: ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடைபெற வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி அலங்காநல்லூரில் கடந்த 8 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. மாநில அரசு ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வந்த நிலையில், இன்று சட்டசபையில் சட்ட முன் வடிவு கொண்டு வரப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட இருக்கிறது.  அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை ஏற்க முடியாது: தொண்டர்கள் எதிர்ப்பு- அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை ஏற்க முடியாது: தொண்டர்கள் எதிர்ப்பு- வீடியோ அம்மா இல்லாத இடத்தில் எனக்கு வேலை இல்லை05:46 அம்மா இல்லாத இடத்தில் எனக்கு வேலை இல்லை சென்னை வரலாற்றில் முதல்முறையாக 192 கி.மீ. வேகத்தில் வீசிய காற்று- வீடியோ00:44 சென்னை வரலாற்றில் முதல்முறையாக 192 கி.மீ. வேகத்தில் வீசிய காற்று- வீடியோ நேற்று தமிழக அரசே பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியது. ஆனால், முக்கிய இடமான அலங்கநால்லூர் வாடி வாசலில் நடத்த முடியவில்லை. அரண் அமைத்து ஜல்லிக்கட்டு நடத்த சென்று இருந்த முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் மாவட்ட ஆட்சியரை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர்.


இந்த நிலையில் போராட்டம் 90 சதவிகிதம் வெற்றி பெற்று விட்டதாகவும் எனவே போராட்டத்தை மாணவர்கள் தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டும் என்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து பல பகுதிகளில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் மெரீனா கடற்கரை, தமுக்கம் மைதானம், கோவை உள்ளிட்ட பகுதிகளில் வாபஸ் பெறப்படவில்லை. வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு பிரசித்தி பெற்ற அலங்காநல்லூரில் இரவு பகலாக 8வது நாளாக இன்றும் போராட்டம் நடைபெற்று வருகிறது.


போராட்டக்குழுவினருடன் ஊர் பெரியவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இதனை கேட்க மாணவர்களும், போராட்டக்குழுவினரும் மறுத்து விட்டனர். ஒரு முடிவு தெரியாமல் இந்த இடத்தை விட்டு கலைந்து செல்லப் போவதில்லை என்று உறுதியாக கூறி அமர்ந்துள்ளனர். இதனையடுத்து ஏராளமான போலீசார் அலங்காநல்லூர் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் எழுந்தது.

இதனையடுத்து போராட்டக்குழுவினருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, நிரந்தர சட்டம் கொண்டு வராவிட்டால் பதவி விலகுவேன் என முதல்வர் உறுதியளிக்க வேண்டும் என்று அலங்காநல்லூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எம்.எல்.ஏ, எம்.பி, முதல்வர் ஆகியோர் உறுதியளிக்க வேண்டும். அவ்வாறு முதல்வர் உறுதி அளித்தால் போராட்டத்தை வாபஸ் பெறுவோம் என அலங்காநல்லூர் மக்கள் அறிவித்துள்ளனர் /tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: