சரவணபவான் எம்.பி.யின் பேச்சுக்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் !
- நமது யாழ் நிருபர்
‘உதயன்’ ‘சுடரொளி’ பத்திரிகைகள், ‘உதயன்’ உல்லாச விடுதிகள், லக்சுமி ஹோட்டல் மற்றும் ‘கேற்வே’ தனியார் கல்வி நிலையங்கள் பலவற்றின் உரிமையாளரும், தொண்ணூறுகளில் ‘சப்றா யுனிகோ பினான்ஸ் லிமிட்டெட்’ என்னும் பெயரில் நிதி நிறுவனம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் நடாத்தி அப்பாவி மக்களின் சேமிப்பை கோடிக்கணக்கில் மோசடி செய்து கோடீஸ்வரராகியதாக தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டப்பட்டுவரும் திரு சரவணபவானிடமிருந்து இக் கூற்று வந்திருப்பது கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் பலத்த கண்டனத்திற்குள்ளாகிவருகிறது.
சர்வதேச மனித உரிமை நிறுவனங்களின் அறிக்கைகளில் திரு சரவணபவானின் ‘சப்றா’ நிதி நிறுவன மோசடியில் அப்பாவி மக்கள் வைப்பிலிட்டிருந்த பணத்தில் ஏறத்தாழ 80 கோடி ரூபாய்கள் வரை மோசடி செய்யப்பட்டதாகவும், இதில் பெருமளவு பணம் கனடாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தில் இன்றும் பேசப்படும் செய்திகளின்படி ‘சப்றா’ நிதி நிறுவனத்தில் பணத்தை வைப்பிலிட்டவர்களில் பெரும்பாலானோர் ஓய்வூதியர்கள் எனவும், பலர் தமது முழு ஆயுட்கால சேமிப்பையும் இந் நிதி நிறுவனத்தில் வைப்பிலிட்டிருந்ததாகவும், இந் நிதி நிறுவனம் மூடப்பட்டதைத் தொடர்ந்து சிலர் தற்கொலை செய்து கொண்டதாகவும், பல இளம் பெண்கள் தமது சீதனத்திற்கென சேமித்த பணத்தை இழந்து திருமண வாய்ப்பைத் தவறவிட்டதாகவும், சிலர் மனநோய்வாய்ப்பட்டதாகவும் அறியப்படுகிறது.
தென் இலங்கை பேரினவாத கட்சியான ஜக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினராக நீண்டகாலம் பதவி வகித்திருந்து, தமிழ் தேசிய கூட்டமைப்பில் பாராளுமன்ற உறுப்பினராகியிருந்த திரு சரவணபவானின் இத் தேர்தல் உரைபற்றி கருத்துத் தெரிவித்த, ‘சப்றா’ நிதி நிறுவனத்தில் வைப்பிலிட்ட தனது ஆயட்கால சேமிப்பு முழுவதையும் இழந்த இளைப்பாறிய ஆசிரியர் ஒருவர், “ நான் கூட அரச உதவியுடனேயே எனதும் எனது திருமணமாகாத ஒரு மகளினதும் வாழ்க்கையை ஓட்டி வருகிறேன். அரசு மூலம் இப்படி இடைக்கிடையே கிடைக்கும் சில உதவிகள்கூட கிடைக்காதுவிட்டால் என்னுடைய குடும்பத்தில் பல அடிப்படைத் தேவைகளையே என்னால் நிறைவேற்ற முடியாது போய்விடும். சரவணபவானின் மோசடியால் எனது மகள் உட்பட பல பெண்கள் திருமணம் செய்து கொள்ளும் சந்தர்ப்பத்தையே இழந்திருக்கின்றனர், சில பெண்கள் முழுப் பணத்தையும் இழந்து தமது வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதற்காக ஒழுக்கக் கேடான நடத்தைகளில் கூட ஈடுபட தள்ளப்பட்டிருந்தது எனக்குத் தெரியும், சில பெற்றோர் வருவாய்க்காக தமது பிள்ளைகளை இயக்கத்திற்கு அனுப்பியும் வாழ்க்கையை ஓட்டி வந்துள்ளனர். இயக்கத்திற்குச் சென்ற இந்தப் பிள்ளைகள் சிலவேளைகளில் இப்போது யுத்தத்தில் இறந்தும் இருக்கலாம். தற்போது அரசிடம் உதவி பெறுபவர்களில் சிலர் சரவணபவானிடம் பணம் முழுவதையும் இழந்து வேறுவழியற்றிருக்கும் வறியவர்களாக இருக்கலாம். இந்த நிலையில், அரச உதவி பெறுபவர்களை தன்மானமற்றவர்கள் எனவும், அவர்கள் தமது பிள்ளைகளுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துபவர்களெனவும் வேறு எவராவது பேசியிருந்தால் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் இவர்கள் பலர் தங்களுடைய தன்மானத்தை இழக்கக் காரணமாயிருந்த இந்தச் சரவணபவான் அப்படிப் பேசியிருப்பது எந்தளவிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இது அரசியல் வேசைத்தனம். இவரை நான் நேரே சந்திக்க நேர்ந்தால் என்ன செய்வேனென்று எனக்கே தெரியாது” என கோபம் கொப்பளிக்கக் கூறினார்.
திரு சரவணபவானின் மேற்படி பேச்சு யாழ் மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு அலைகளைத் தோற்றுவித்துள்ளது. இது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் வாய்ப்புகளை பெருமளவில் பாதிக்கும் என்றே அரசியல் அவதானிகள் கருதுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக