திங்கள், 6 ஜூன், 2011

தெலுங்கு படங்களில் மட்டும் கிளாமராக நடிக்கிறேன் என்று சொல்வது தவறானது என்றார் தமன்னா!


தெலுங்கு படங்களில் மட்டும் கிளாமராக நடிக்கிறேன் என்று சொல்வது தவறானது என்றார் தமன்னா. இதுபற்றி அவர் கூறியதாவது: தெலுங்கில் நாக சைதன்யாவுடன் நடித்த ‘100% லவ் ஸ்டோரி’ ஹிட்டாகியுள்ளது. அடுத்து அல்லு அர்ஜுனுடன் நடித்துள்ள ‘பத்ரிநாத்’ வர இருக்கிறது. தமிழில் தனுஷுடன் நடித்துள்ள ‘வேங்கை’ படம் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது. இதில் கல்லூரி செல்லும் பெண்ணாக நடித்துள்ளேன். இயக்குனர் ஹரி, என் கேரக்டரை சிறப்பாக செதுக்கியிருக்கிறார். இதைத்தவிர தமிழில் வேறு படங்கள் இல்லை. தெலுங்கில் மூன்று படங்களில் நடிக்கிறேன். தெலுங்கு படங்களில் மட்டும் கிளாமராக நடிக்கிறேன் என்பதில் உண்மையில்லை. தெலுங்கில் பாடல் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் கிளாமர் எதிர்பார்க்கிறார்கள். மற்ற காட்சிகளில் நான் அப்படி நடிப்பதில்லை. தமிழில் எனக்கு கிடைத்த கேரக்டர்களில் கிளாமராக நடிக்க வாய்ப்பு வரவில்லை. வந்தால் நடிப்பீர்களா என்கிறார்கள். கதைக்கு தேவை என்றால் அப்படி நடிக்கலாம்.

கருத்துகள் இல்லை: