இதனை உலகத்தமிழ் சொந்தங்களான அனைத்து தரப்பினருக்கும் உணர்த்துவதற்காகவும் ஆதரவு திரட்டவும் மறுவாழ்வு முகாம் மக்கள் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
கடந்த காலங்களில் அரசியல் பிரமுகர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், கொள்கை வகுப்பாளர்கள், பல்கலைக்கழக துறைசார் பேராசிரியர்கள், அரசுசாரா தொண்டு நிறுவனங்கள், மத்திய மாநில அரசு அதிகாரிகள் முதற்கொண்டு அனைத்து தரப்பினருக்கும் தெரியப்படுத்தியிருக்கின்றனர். தற்போதைய தமிழக முதல்வர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்களிடமும் இது குறித்து கோரிக்கை வைத்திருந்தனர்.
இதனை தொடர்ந்து தற்போது பொங்கல் தினத்தை குடியுரிமை பொங்கல் என அடையாளப்படுத்தி கொண்டாடுகின்றனர்.
தொடர்ந்து இது போன்ற முன்னெடுப்புகளால், இந்திய குடியுரிமையை விரும்புவதையும், ஆதரவு திரட்டலையும் இந்திய இறையாண்மைக்கு கட்டுப்பட்டு தங்களுக்கு மறுக்கப்பட்டிருக்கும் அடிப்படை மனித உரிமையை மீட்டெடுக்க செயல்பட்டு வருகின்றனர்.
இதற்கென விழிப்புணர்வு குழு ஒன்றை உருவாக்கி இதுபோன்ற முன்னெடுப்புகளை செய்து வருகின்றனர் மறுவாழ்வு முகாம் தன்னார்வலர்கள்.
தங்களது ஆதரவை இந்தச் செய்தியை பகிர்ந்து தெரிவிக்கவும்.
நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக