மாலைமலர் : இந்த முறை பாஜகவும், சமாஜ்வாதி கட்சியும் உ.பியை ஆளப்போவதில்லை என பகுஜன் சமாஜ்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சியினரும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில், உத்தரப்பிரதேச தேர்தலில் மாயாவதி போட்டியிடவில்லை என பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் எம்பி சந்திரா மிஸ்ரா கூறியதாவது:-
உ.பியின் முன்னாள் முதல்வர் மாயாவதி வரும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. இருப்பினும் உ.பி.யில் மொத்தமுள்ள 403 சட்டமன்ற தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும். சமாஜ்வாதி கட்சியிடம் 400 வேட்பாளர்கள் கூட கிடையாது. பிறகு எப்படி அகிலேஷ் யாதவ் ஆட்சியை பிடிக்க முடியும்?
இந்த முறை பாஜகவும், சமாஜ்வாதி கட்சியும் உ.பியை ஆளப்போவதில்லை. பகுஜன் சமாஜ் கட்சி தான் ஆளப்போகிறது.
இவ்வாறு சந்திரா மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக