Shyamsundar - Oneindia Tamil :பஞ்சிம்: கோவாவில் தன்பாலின ஈர்ப்பு கொண்ட இரண்டு பெண் மருத்துவர்கள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தியாவில் தன்பாலின உறவு உட்பட அனைத்து வகையான "எல்ஜிபிடிக்யூ +" உறவுகளும் சட்ட ரீதியாக சரியானதே என்று கடந்த சில மாதங்களுக்கு முன் உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கியது.
இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுக்க பல நாடுகள் இந்த முற்போக்கான தீர்ப்பை வரவேற்றது.
எல்ஜிபிடிக்யூ +" பிரிவினர் பல ஆண்டுகளாக நடத்திய போராட்டங்களுக்கு பின் அவர்களுக்கான உரிமை உச்ச நீதிமன்றம் மூலம் வழங்கப்பட்டது.
இப்போதும் கூட "எல்ஜிபிடிக்யூ +" பிரிவினரை இந்தியாவில் சிலர் பார்க்கும் கண்ணோட்டம் மாறவில்லை என்றாலும் கூட ஆங்காங்கே "எல்ஜிபிடிக்யூ +" திருமணங்கள் நடக்க தொடங்கி உள்ளன.
பெற்றோர் அனுமதியோடும், திருமண மண்டபங்களிலும் பெரிய அளவில் "எல்ஜிபிடிக்யூ +" திருமணங்கள் நடக்க தொடங்கி உள்ளன. இது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. முற்போக்கான பாதையில் இந்தியாவும் நகர தொடங்கி உள்ளது. அந்த வகையில்தான் கோவாவில் இரண்டு பெண்களுக்கு இடையில் நடந்த லெஸ்பியன் தன்பாலின நிச்சயதார்த்தம் பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது. கோவாவில் தனியார் மண்டபம் ஒன்றில் இந்த நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
சுரபி மித்ரா மற்றும் ப்ரோமிதா முகர்ஜி ஆகிய இரண்டு பெண் டாக்டர்கள் இடையே இந்த அழகான நிச்சயதார்த்தம் நடந்தது. இரண்டு பெண்களின் உறவினர்கள், நண்பர்கள் புடை சூழ பாடல்கள் ஒலிக்க இந்த நிச்சயதார்த்தம் நடந்தது. இதை ஆங்கிலத்தில் இவர்கள் engagement என்று அழைக்காமல் "commitment ring ceremony" என்று அழைத்து விழாவை நடத்தினார்கள்.
இந்த நிச்சயதார்த்தம் இணையத்தில் வைரலான நிலையில் தங்களின் அழகான காதல் கதை குறித்து இருவரும் மனம் திறந்துள்ளனர்.
ப்ரோமிதா முகர்ஜி கொல்கத்தாவை சேர்ந்தவர். சுரபி நாக்பூரை சேர்ந்தவர். கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த மருத்துவ ரீதியான ஆலோசனை கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள சுரபி கொல்கத்தா சென்றுள்ளார். அந்த நிகழ்வில் ப்ரோமிதா முகர்ஜி உரையாற்றி இருக்கிறார். ப்ரோமிதா முகர்ஜியை பார்த்ததும் சுரபிக்கு காதல். ஆனால் ப்ரோமிதா முகர்ஜி தன் பாலின உறவு கொண்டவரா.. அவரிடம் பேசலாமா என்ற தயக்கம் சுரபிக்கு இருந்துள்ளது.
அவரை பார்த்ததும் காதல் வந்தது என்று சொல்ல மாட்டேன்.. ஆனால் அவரை பார்த்ததும் பிடித்துவிட்டது.. பின்னர் அது காதலாகிவிட்டது என்று சுரபி தனது காதல் பற்றி கூறியுள்ளார். அவரை அன்று மாலையே சந்தித்து பேச வேண்டும் என்று நினைத்தேன்.. அவருடன் பீச்சுக்கு செல்ல வேண்டும்.. ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அன்று அவர் பிஸியாக இருந்தார். நானும் இரவே நாக்பூர் திரும்ப வேண்டும் என்பதால் அவரோடு டேட்டிங் செல்ல முடியவில்லை, என்று கூறினார்.
ஆனால் அதன்பின் நாக்பூர் வந்த சுரபி ப்ரோமிதா முகர்ஜிக்கு இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்பி பேசி இருக்கிறார். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பேசியவர்கள், காதலில் கசிந்து உருகி இணைந்துள்ளனர். ஆனால் சுரபி தனது காதலை நேரடியாக சொல்ல அஞ்சி இருக்கிறார். மறைமுகமாக காதலை வெளிப்படுத்திக்கொண்டாலும் சுரபிக்கு நேரடியாக காதலை சொல்ல தயக்கம். ப்ரோமிதாவிற்கு எங்கே தன்பாலின ஈர்ப்பு இல்லாமல் இருக்குமோ என்ற அச்சம் சுரபிக்கு!
இருவரும் பின்னர் அடிக்கடி கொல்கத்தாவிலும், நாக்பூரிலும் சந்தித்துக்கொண்டனர். இந்த நிலையில் கொல்கத்தாவில் ப்ரோமிதா முகர்ஜியை சந்தித்த சுரபி பேசிக்கொண்டே இருக்கும் போதே.. கோவாவில் நண்பர்கள் புடை சூழ நான் உன்னிடம் காதலை சொன்னால் நீ அதை ஏற்றுக்கொள்வாயா என்று கேட்டு இருக்கிறார். இதை கேட்டதும்.. நான் எப்படி அதை மறுப்பேன்.. கண்டிப்பாக ஏற்றுக்கொள்வேன் என்று ப்ரோமிதா முகர்ஜி பதில் அளித்துள்ளார்.
அதாவது ஐ லவ் யூ என்பதை மட்டும் பகிர்ந்து கொள்ளாமல் இருவரும் அங்கேயே பரஸ்பரம் காதலை தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில்தான் அடுத்த இரண்டு வாரத்திலேயே கோவாவில் இருவரும் நிச்சயம் செய்ய முடிவு செய்தனர். நேற்று முதல்நாள் கோவாவில் நண்பர்கள் புடைசூழ நிச்சயம் செய்து கொண்டனர். பிரம்மாண்ட விழாவில் மோதிரம் மாற்றிக்கொண்டு இவர்கள் இணைந்தனர். கோவா திருமணம் கோவா திருமணம் இன்னும் சில நாட்களில் இவர்களுக்கு கோவாவில் திருமணம் நடக்க உள்ளது.
இதை திருமணம் கிடையாது சமூக இணைப்பு "Civil Union." என்று இவர்கள் அழைத்து உள்ளனர். இந்த க்யூட் ஜோடியின் நிச்சய புகைப்படங்கள் இணையம் முழுக்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக