செவ்வாய், 11 ஜனவரி, 2022

கேரளா நடிகை பாவனா திலீப் மீதான பாலியல் வழக்கு பற்றி பேட்டி

 மின்னம்பலம் :  கேரளாவில் 2017ஆம் ஆண்டு, படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.
கேரள அரசியல் வட்டாரத்தையும், திரையுலகையும் இந்த சம்பவம் அதிர வைத்தது. இது சம்பந்தமான வழக்கு தற்போது வேகமெடுத்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட நடிகை பாவனா ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, தான் எதிர்கொண்ட அவமானங்களைப் பற்றி சமூக வலைதளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.


இது எளிதான பயணம் அல்ல. விக்டிமாக இருந்து, சர்வைவராக மாறியதற்கான பயணம். ஐந்து வருடங்களாக, என் மீது சுமத்தப்பட்ட தாக்குதலின் பாரத்தில் எனது பெயரும், எனது அடையாளமும் நசுக்கப்பட்டு வருகின்றன. குற்றம் செய்தது நான் இல்லை என்றாலும், என்னை அவமானப்படுத்தவும், அமைதியாக்கவும், தனிமைப்படுத்தவும் பல முயற்சிகள் நடந்தன.

ஆனால், அப்படிப்பட்ட சமயங்களில் என் குரலை உயிர்ப்பிக்க முன்வந்த சிலரை நான் பெற்றிருக்கிறேன். இப்போது எனக்காக ஒலிக்கும் பல குரல்களைக் கேட்கும்போது, இந்த யுத்தத்தில் நான் தனியாள் இல்லை என்பதை உணர்கிறேன். உடன் நின்ற அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றி எனத் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் பாவனா.

இதுதொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளியாக நடிகர் திலீப், பல்சர் சுனி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 84 நாட்கள் சிறையில் இருந்த திலீப், ஜாமீனில் வெளியே வந்தார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. சில நாட்களுக்கு முன் நடிகர் திலீப்பின் நண்பரும் மலையாள இயக்குநருமான பாலசந்திர குமார் இந்த சம்பவத்தில் நடிகர் திலீப்புக்கு உள்ள தொடர்பு குறித்து பல தகவல்களை வெளியிட, இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

-அம்பலவாணன்

கருத்துகள் இல்லை: