ஞாயிறு, 9 ஜனவரி, 2022

போத்தீஸ் - சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ...

  Govindaraji Rj | Samayam Tamil  : சென்னை குரோம்பேட்டையில் உள்ள போத்தீஸ் ஜவுளிக்கடையில் 13 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வைரஸ் இதுவரை சுமார் 22 கோடி பேரை தாக்கியுள்ளது. இந்தியாவில் 3,071 பேர் தற்போது வரை ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருநாள் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 41,986-ஐ கடந்துள்ளது.
இந்த நிலையில், டெல்டா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் என்பது மூன்றாவது அலை பரவல் மற்றும் சமூக பரவலாக உருவெடுத்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதனை மெய்ப்பிக்கும் வகையில் தமிழகத்தில் தினசரி பாதிப்பு 11,000-ஐ நெருங்கியுள்ளது. சென்னையில் ஒருநாள் பாதிப்பு ஐந்தாயிரத்தை கடந்துள்ளது.


குரோம்பேட்டை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் 30 ஊழியர்களுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த கடையை ஒருவாரத்திற்கு மூட சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனால் அந்த கடைக்கு அண்மையில் சென்று வந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

இதனிடையே, குரோம்பேட்டையில் உள்ள பிரபல போத்தீஸ் ஜவுளிக்கடையில் சில ஊழியர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு பணிபுரியும் 240 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 13 பேருக்கு இன்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், குரோம்பேட்டை போத்தீஸ் வணிக வளாகத்தை ஒருவாரத்திற்கு மூட உத்தரவிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய உத்தரவிட்டுள்ளனர். குரோம்பேட்டை பகுதியில் உள்ள இரு பெரிய நிறுவனங்களில் ஒரே நேரத்தில் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: