செல்லபுரம் வள்ளியம்மை : சென்னை லயோலா கல்லூரி தலைமை தமிழ் விரிவுரையாளர், அராலி இந்து கல்லூரி அதிபர் அமரர் செ.முத்துக்குமாரசாமி பிள்ளையவர்களால் எழுதப்பட்ட யாழ்ப்பாண குடியேற்றம் என்ற நூல் பல அரியசெய்திகளை கொண்டிருக்கிறது . இந்நூல் நூலகம் ஆவண காப்பகத்தில் இருக்கிறது
அதில் உள்ள சில செய்திகளை இங்கே தந்திருக்கிறேன்
குறிப்பாக அன்றைய யாழ்ப்பாணத்தின் குடிப்பரம்பல் பற்றிய சுவாரசியமான செயதிகள் இதில் உள்ளன .....
....
மலையாளத்தில் குடியேறிய நம்பூதிரிகள் அங்கிருந்த மலையாளிகளை நாட்டை விட்டு வெளியேற்றினார்கள் என்று கேரளோற்பத்தி என்னும் நூல் கூறுகிறது
இதே கருத்தை பேராசிரியர் வி .ரங்காச்சாரியம் கூறியிருக்கிறார்
நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட மலையாளிகளில் சிலர் இருபது மைல் அகலமுள்ள பாலக்காட்டு கணவாயில் உள்ள வியாபார பாதை வழியாக யாழ்ப்பாணம் சென்று குடியேறினார்கள்
சிலர் அதே கணவாய் வழியாக சென்று கொல்லிமலை ஜவ்வாது மலை பச்சை மலைகளில் சென்று குடியேறி மறைந்து வாழ்கின்றனர்
வேறு சிலர் கடல் வழியாக கன்னியாகுமரி காயல்பட்டினம் ராமேஸ்வரம் மாந்தை வழியாக வந்து யாழ்ப்பாணத்திலும் தென்னிலங்கையிலும் குடியேறினர் noolaham யாழ்ப்பாண குடியேற்றம்
............
மலையாள குடியேற்ற முன்னோர்களாக விளங்கிய முக்குவர்கள் நெடுந்தீவு ஆனைக்கோட்டை வட்டுக்கோட்டை பொன்னாலை கீரிமலை மயிலிட்டி போன்ற இடங்களில் குடியேறி தங்கள் திறமையாலும் முயற்சியாலும் நெடுந்தீவு வெடியரசன் தலைமையில் ஒரு அரசியல் பீடத்தை நிறுவினர்
வெடியரசன் குறுகிய காலத்தில் தரைப்படை கடற்படைகளோடு சிறந்த அரசனாக விளங்கினான்
தமிழ்நாட்டின் நாற்பத்தெட்டு சாதிகளில் முப்பத்து நான்கு சாதிகளை சேர்ந்தவர்கள் யாழ்ப்பாணத்தின் பல பக்கங்களிலும் குடியேறினார்கள் என்பது தோம்புகள் (பாரம்பரிய நில உரிமை பத்திரம்) மூலம் அறிய கூடியதாக உள்ளது
தமிழரசு கி பி . 795 ஆம் ஆண்டில் தொடங்கியதில் இருந்து குடியேற்றக்காரர்களுக்கு நல்ல காலம் பிறந்தது உயர்ந்த உத்தியோகம் பெற வாய்ப்பு இருந்தது
ஆனால் தமிழரசின் படைகளில் இருந்து விலகி மறைந்து வாழ்ந்ததாலும் உயர் குடிப்பிறப்பு இன்மையாலும் அது தடைப்பட்டது
அதை நீக்க மழவர் பாணர் போன்றோர் முயற்சி செய்தனர்
இடை சாதிகளை சேர்ந்த பலர் தங்கள் பெயர்களோடு பிள்ளை முதலி ஆகியவற்றை சூடிக்கொண்டு வேளாளர்களாக முயன்றனர்
.....
போர்த்துகேசர்கள் சாதி கட்டுப்பாட்டை தளர்த்தியதால் சாதிகளில் பல மாற்றங்கள் நேர்ந்தன
காணிகளை பற்றிய விபரங்கள் அடங்கிய தோம்புகள் முதல் முதலாக 1623 இல் எழுதப்பட்டபோது உத்தியோகங்களில் இருந்த பாணர் மழவராயர் போன்றோர் தங்களை உயர்ந்த சாதியாக பதிந்து கொண்டனர்.
இவர்களை பின்பற்றி ஏனைய பல சாதியினரும் தங்கள் சாதிப்பட்டங்களை மறைத்து வேளாளர் என்று பதிந்து கொண்டனர்
அரசாங்க ஏடுகளில் வேளாளர் என்று பதியப்பட்டது இதுவே முதல் முறையாகும்
பெருந்தொகையான மக்கள் தங்களை வேளாளர் என்று பதிந்து வருவதை உத்தேசித்து போர்த்துகீசிய அரசினர்
வேளாளர் என்ற முதலி பட்டத்தை 18 இறைசாலுக்கு (போர்த்துக்கீசிய நாணயம்) விற்க தொடங்கினர்
பெருந்தொகையான மக்கள் அப்பட்டத்தை விலைக்கு வாங்கி தம்மை வேளாளராக்கி கொண்டனர்
இதன் விளைவாக கி பி 1690 இல் 10170 ஆக இருந்த வேளாளர் சனத்தொகை கி பி 1790 இல் 15796 ஆக உயர்ந்தது
இவ்வித சாதி மாறல்களால் சில சாதிகளை தவிர பல இடைச்சாதிகள் மறைந்து போயின
இதற்கிடையில் போர்த்துக்கீசர் ஆட்சி காலம் 1657 இல் முடிந்து ஒல்லாந்தர் ஆட்சிக்காலம் ஆரம்பம் ஆனது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக