tamil.asianetnews.co : நீட் என்பது துரோகமும் - சூழ்ச்சியும் மட்டுமே என்பதற்கு புதிய உதாரணம், அதன் வினாத்தாள் 35 லட்சத்துக்கு விற்பனையானதேயாகும். ஜெய்ப்பூரில் நீட் வினாத்தாள் தேர்வுக்கு முன்பே கசிந்த விவகாரத்தில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீட் என்பது துரோகமும் - சூழ்ச்சியும் மட்டுமே என்பதற்கு புதிய உதாரணம், அதன் வினாத்தாள் 35 லட்சத்துக்கு விற்பனையானதேயாகும். ஜெய்ப்பூரில் நீட் வினாத்தாள் தேர்வுக்கு முன்பே கசிந்த விவகாரத்தில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஜெய்பூரில் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜெய்பூரில் ராஜஸ்தான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி ஒரு நீட் தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அங்கு மதியம் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெற்றது. அந்த மையத்தில் 4 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். இங்குதான் தானேஸ்வரி என்ற அந்த மாணவி தேர்வு எழுதச் சென்றிருந்தார்.
இவர், ராஜஸ்தான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி மையத்தில் தேர்வு எழுதவிருந்தார். தானேஸ்வரிக்காகவே நீட் தேர்வு வினாத்தாள் விலை பேசப்பட்டது. தானேஸ்வரியின் மாமா பேரம் பேச ரூ.35 லட்சத்துக்கு வினாத்தாள் விற்பனைக்கு டீல் முடிக்கப்பட்டது. தானேஸ்வரி தேர்வு எழுதிய மையத்திலிருந்து ராம்சிங் என்பவர் தான் மறைத்துவைத்திருந்த மொபைல் போன் மூலம் புகைப்படம் எடுத்து வினாத்தாளை தானேஸ்வரியின் மாமாவுக்கு அனுப்பினார்.NEET question paper sold for Rs 35 lakh ... 8 arrested
அவரது மாமா வினாத்தாளை நீட் தேர்வு பயிற்சி மைய ஆட்களுக்கு அனுப்பி வைத்தார். பங்கஜ் யாதவ், சந்தீப் என இருவரும் சேர்ந்து தேர்வுத் தாளில் விடைகளை மார்க் செய்து அனுப்பினர். ராம்சிங்குக்கும், கல்லூரி நிர்வாகி முகேஷ் சமோடாவுக்கும் விடைத்தாளை அனுப்பினர். இதை அறிந்து கொண்ட போலீஸார் தேர்வு மையத்திலிருந்த தானேஸ்வரியிடமிருந்து விடைத்தாளையும் வினாத்தாளையும் பறிமுதல் செய்தனர். தேர்வு மையத்துக்கு வெளியிலேயே காரில் ரூ.10 லட்சம் பணத்துடன் தானேஸ்வரியின் மாமா காத்திருந்துள்ளார்.
இதையடுத்து தேர்வு மைய அதிகாரி, மாணவி உட்பட 8 பேரை போலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக