செவ்வாய், 14 செப்டம்பர், 2021

இலங்கை தமிழ் பெண் கம்சியா குணரத்தினம் நோர்வே நாடாளுமன்ற MP தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்

Image
kamzy gunaratnam
இலங்கை தமிழ் பெண் நேற்று நடந்த நோர்வே நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் .  ஸ்கண்டிநேவியன் நாடுகளின் முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் இவராகும்
Losliya Mariyanesan Wiki, Age, Husband, Family, Boyfriend, Biography & More  – WikiBio
Losliya

Sivachandran Sivagnanam  : சமூகவியல் படிக்கும் மாணவர்கள் யாரும் Losliya effect என்ற ஒரு தியறியை உருவாக்கி உங்கள் PhD ஆய்வாக செய்யலாம்.
விளையாட்டு இல்லை உண்மையாகவே சொல்கிறேன்.
இது எமது சமூகத்தில் இருக்கும் ஒரு அசிங்கமான பக்கம்.
சிம்பிள் தியரி : எமக்குத் தெரிந்த ஒருத்தன் உருப்படக்கூடாது. அதுவும் பெண் என்றால் வேண்டவே வேண்டாம்.
ஏற்கனவே இதுபற்றி ஒரு தடவை எழுதி இருந்தேன். இப்போது இந்த பெண்ணின் படம் வெளிவரப்போகிறது என்றதும் பழையபடி திரும்பவும், இதெல்லாம் ஒரு மூஞ்சியா, இந்த மூஞ்சிக்கு ஹீரோயின் வேடம் கேட்குதா என மீம்ஸ் போட தொடங்கிவிட்டார்கள்.
இதில் மிகவும் டேஞ்சரான ஆட்கள், "இனத்துக்காக உயிரையே கொடுத்த வீரப்பெண்கள்" என தொடங்கிற ஆட்கள்.
ஒரு இனத்தில் பிறந்து விட்டாள் என்பதற்காக எந்தவொரு பெண்ணும் அந்த இனத்தில் இருக்கும் ஒவ்வொரு ஆணும் நினைப்பது போல்தான் இருக்க வேண்டும் என நினைப்பது எவ்வளவு மோசமான, ஆபத்தான மனநிலை.
அண்மையில் சில பெண்கள் பற்றி வெளிவந்துகொண்டிருக்கும் மீம்ஸ்கள் தமிழ் சமூகத்தில் பெண்ணாக பிறப்பது அவ்வளவு பாவமான செயலா என எண்ணத் தோன்றுகின்றது.
இதில் ஆச்சரியமான விடயம், ஆண்களுக்கு நிகராக இந்த செயலில் பெண்களும் ஈடுபடுகிறார்கள்.


இதை கொஞ்சம் டீப்பாக ஆராய்ந்தால் நம்பிக்கை என்ற பெயரில் ஒவ்வொரு அடக்குமுறையும் எப்படி அடக்கப்படுபவர்கள் மூலமாகவே கடத்தப்படுகிறது என்ற ஒரு உண்மை தெரியவரும்.
இது பெரிய சிதம்பர ரகசியமில்லை, " நாங்க அடக்க ஒடுக்கமாக இருக்கிறம்தானே, இவ மட்டும் ஏன் இப்படி சிலுப்பிக் கொண்டு திரியுறா" என நமது பெண்கள் சொல்வதே இலகுவாக அந்த காரணத்தை சொல்லிவிடும். ஒரு விடயத்திலிருந்து வெளிவரமுடியாமல் அடக்கப்பட்டு கிடக்கும் ஆட்கள் மற்றவர்களும் அதை தாண்டி போக கூடாது என்ற மனநிலை.
நோர்வேயில் ஒரு ஈழத்து வம்சாவழி பெண் எம்பி ஆகியிருக்காம். இப்ப பாருங்களேன் , நம்மட ஆட்கள் அவர் என்ன சாதி, அவருக்கு ஆண் நண்பர் இருக்கா, ஒஸ்லோ நடுவில் நின்று உரக்க தமிழில் பேசுகிறாரா, கணுக்கால் வரை உடை அணிகிறாரா என முழு டீட்டைலோடும் கட்டுரை எழுதுவானுகள்.
 புலம் பெயர் தமிழர்களில் கூட இந்த குணம் உள்ளது. ஒருவரை விட இன்னொருவர் உயர்ந்தால் அல்லது புகழடைந்துவிட்டால் அவர்களால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. குறிப்பாக இன்னொருவரின் பிள்ளையை விட அதிக ரிசல்ட் என் பிள்ளை எடுத்தே ஆக வேண்டும் என்பது இங்கும் தொடர்கிறது. ஆனால் இங்கே பிறந்து வளர்ந்த தமிழ் பிள்ளைகளில் அந்த இயல்பை குறைவாகவே காண்கிறேன்.
ஆக, கூட இருப்பவரின் வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்படும் தமிழரின் இந்த இயல்பு இனம் சார்ந்து பிறப்புரிமை ரீதியாக வந்ததில்லை. வாழும் சூழல் சார்ந்து வந்ததாகவே இருக்க வேண்டும். இந்த கெட்ட பழக்கத்தை அடுத்த சந்ததிக்கு கடத்தாத படி சூழலை இலங்கையிலும் அமைத்துக்கொள்ள வேண்டும்.
(எம்மிடையே இருக்கும் இன்னொரு கெட்ட பழக்கத்தை சொல்லவா? இப்போது என்னைப்பற்றி ஒரு விடயம் எழுதுவார்கள் அதை ஷெயார் பண்ணும்போது புரிந்துகொள்வீர்கள்)

கருத்துகள் இல்லை: