இந்நிலையில், நேற்று நள்ளிரவு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 13 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன், ஜான் லூயிஸ் மருத்துவமனையில் போதிய ஆக்சிஜன் வசதி இருப்பதாக தெரிவித்துள்ளார். 13 பேரின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இருப்பினும், இறந்தவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்தவர்களா என்பது குறித்த தகவல்கள் முழுமையாக கிடைக்கவில்லை.
புதன், 5 மே, 2021
செங்கல்பட்டு GH-ல் ஒரே நாள் இரவில் 13 பேர் பலி: ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமா?
tamil.indianexpress.com :நேற்று நள்ளிரவு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 11 பேர் ஆக்சிஜன்
பற்றாக்குறை காரணமாக உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதி தீவிரமடைந்துள்ளது. நாள்
ஒன்றுக்கான தொற்று எண்ணிக்கை சுமார் 22000-ஐ நெருங்கி உள்ளது. சென்னை,
செங்கல்பட்டு உள்ளிட்ட தொற்று அதிகமாகி உள்ள முக்கிய மாவட்டங்களில்
ஆக்சிஜனுடன் கூடிய மருத்துவப் படுக்கை வசதிகளுக்கும், ரெம்டெசிவிர்
மருந்துக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இதனால், பெரும்பாலான நோயாளிகள் அவதியுற்று வருகின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக