சனி, 8 மே, 2021

மேற்கு வங்கத்தில் வானதி சீனிவாசன் கைது! அனுமதி இன்றி தெருவில் போராட்டம்.. மம்தா அரசு அதிரடி

Venkat Ramanujam  : :  அன்பின் மம்தா திதி.  கொரானா காலத்தில் ஸ்டேட் விட்டு ஸ்ட்டேட் தாவி  சட்டத்தினை மீறிய எங்க தமிழ் நாட்டு  பெண்ணு Vanathi Srinivasan அக்காவை உங்க வங்கத்து  ஜெயிலில் அடைச்சி  வச்சிகோங்கோ ..
வச்சிருந்து  1 வருஷம் கழிச்சு பத்திரமா திருப்பி  அனுப்புங்க ..
இதை மட்டும் செய்ங்க ..காரணம்..
அதிமுக  எதிர்கட்சிதலைவர்  தேர்வு  உட்கட்சி விவகாரத்தில் வானதிக்கா  தலையிட்டதால் கடும் கடுப்பில் இருக்கும்  #அதிமுக காரங்க பெரு மகிழ்ச்சி அடைவாங்க verified

 மாலைமலர் :மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றது. இருப்பினும் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளரான சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார்.


இதனால் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
11 பா.ஜனதா தொண்டர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமான வீடுகளும் எரிக்கப்பட்டன. இதை கண்டித்து மேற்கு வங்கத்தில் பா.ஜனதா போராட்டம் நடத்தி வருகிறது.

தேசிய பா.ஜனதா மகளிரணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் மேற்கு வங்கம் சென்றார். அங்கு கொலை செய்யப்பட்ட பா.ஜனதா தொண்டர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துவிட்டு மம்தாவை கண்டித்து போராட்டம் நடத்தினார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
அவருடன் ரூபாகங்குலி எம்.பி. மேற்கு வங்க மாநில மகளிரணி தலைவி அக்னிமித்ராபால் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்களை போலீஸ் வேனில் ஏற்றி லால்பஜார் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
இதுபற்றி வானதி சீனிவாசன், ஒரு அமைதி போராட்டத்துக்கு கூட மேற்கு வங்கத்தில் அனுமதி இல்லை. எங்களுக்கே இந்த கதி என்றால் சாதாரண மக்களின் நிலை எப்படி இருக்கும் என்று டுவிட்டரில் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

கருத்துகள் இல்லை: