48 நிமிடங்கள் கழித்து அது என் கண்ணில்பட்டபோது, அதை நான் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து எனது பக்கத்தில் "Fiction writer எல்லாம் பிச்சை வாங்கணும்" என்று பதிந்திருந்தேன்.
அதில் ஏன் தன்னை Tag செய்யவில்லை என்று கேட்ட அதியமானுடன் உரையாடல் முற்றியது.
அந்த உரையாடலிலே நான் அவருடைய பதிவினை Cooked Up Story என்றேன். (கற்பனைக் கதை என்ற சொல்லாடல் அப்போதுதான் எழுந்தது. ) அவர் அதனை மறுத்தார்.
கோபமடைந்தார். என் முட்டாள்தனம் என்றெல்லாம் வார்த்தைகளைச் சிதறவிட்டார். அதன்பிறகே, அதிமுக எஸ்.பி.வேலுமணி அரசு நிலத்தை அபகரித்த பதிவை புகைப்படத்துடன் பதிந்தேன்.
தொடர்ச்சியாக அதியமானின் கருத்து ட்விட்டர் - ஃபேஸ்புக்கில் விமர்சனத்திற்கு உள்ளானது. பிறகு தான் எழுதிய பின்னூட்டங்களை நீக்கத் துவங்கிய அதியமான் இறுதியாக, எழுதிய பதிவையும் நீக்கிவிட்டார். (அநேகமாக அவரே சொல்வதுபோல Onlyme-ல் வைத்திருக்கலாம்).
தற்போது, அந்தக் கருத்துக்களில் இலவச கல்வி, இலவச மருத்துவம் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை வழங்குவது குறித்த கம்மெண்ட் ஒன்றை அவர் எழுதாதது போலவும் போட்டோஷாப் செய்தது போலவும் ஒரு சாட்சியம் சொல்லும் பதிவைப் பகிர்ந்திருக்கிறார்.
நகைக்கத்தான் வேண்டும்.
அதியமான் அல்லது அவர் தொடர்புடையவர்கள் இந்த Screen Shoot-கள் போலியாக தயாரிக்கப்பட்டவை என்று குத்துமதிப்பாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவு வேலை மெனக்கெட்டு அதியமான் அவர்களை யாரும் வம்பில் மாட்டிவிடத் தேவை இல்லை.
எனினும், நிதானமின்றி பதட்டத்துடன் இருக்கும் அதியமான் அவர்களுக்கு இப்போது ஒரு கோரிக்கை வைக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள தொலைப்பேசி உரையாடலின்படியே, "திருப்பூரில் இருந்து விரிவாக்கத்திற்காக மத்தியபிரதேசத்துக்கு இடம்பெயர்ந்த நிறுவனம்" பற்றிய தரவுகளைத் தாருங்கள். தமிழகத்தின் நன்மைக்காகவேணும் அதைத் தடுத்து நிறுத்தச்செய்யலாம்.
தனியார் செய்தித் தொலைகாட்சியில் உயர்பொறுப்பில் இருக்கும் நீங்கள் ஆதாரமில்லாமல் அப்படி ஒரு கதையைச் சொல்லி இருக்க மாட்டீர்கள் என இப்போது நம்புகிறேன். அட்லீஸ்ட் நீங்கள் பணியில் இருக்கும் செய்தி நிருவனத்திலாவது அதன் உண்மை விவரங்களைக் கொடுத்துச் செய்தியாகக் கொண்டுசேர்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.
எதற்கு வதந்தி பேசுவதுபோல் பதிவு போட்டு, அது விமர்சனத்துக்குள்ளாகி, பிறகு அழித்து.. அது போட்டோஷாப் என்று ஸ்டண்ட் அடித்து, கேள்வி கேட்பவனை முட்டாள் (Idiot) என்று திட்டி நேர விரயம் செய்ய வேண்டும்...
அன்புடன்,
கார்த்திக் புகழேந்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக