Kandasamy Mariyappan : ஒரு சில சின்னச் சின்ன செய்திகளுக்கு பின்னால்
எவ்வளவு பெரிய முன்னேற்றத் தடைகள் இருக்கிறது? அறிந்து கொள்வோம்.
அத்திட்டம் வெற்றிகரமாக முடிந்திருந்தால், நிறைய பலன்களை தமிழகம் அனுபவித்து இருக்கும்.
ஆனால் அதை நிறைவேறாமல் விடுபட்டதன் பின்னணி யாது?
மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை ஏன் நிறுத்தப்பட்டது!?
Billion $ Questions!
UPA 1 அரசில் அங்கம் வகித்த திமுக, சென்னை துறைமுக வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், திருப்பெரும்புதூரில் ஒரு Dry Port அமைத்து, சென்னை துறைமுகத்திலிருந்து மதுரவாயல் வரை 19 கிலோமீட்டர் தூரத்திற்கு 1800 கோடி மதிப்பில் ஒரு பறக்கும் சாலையை அமைக்க திட்டம் வகுத்து 400 கோடி செலவு செய்து தூண்கள் அமைக்கும் பணி முடிந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 2009ல் இதன் பணிகள் துவங்கப்பெற்றது.
இது அனைவரும் அறிந்த விவரம்.
அடுத்து 2011ல் வந்த செல்வி. ஜெயலலிதா அவர்கள், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அந்த திட்டத்தை அப்படியே நிறுத்தி விட்டார்.
உண்மையில் அரசியல் காழ்ப்புணர்ச்சியையும் தாண்டி வேறு ஒரு திட்டம் செல்வி ஜெயலலிதா அவர்களிடம் இருந்தது.
அதாவது சென்னை துறைமுகத்தின் வளர்ச்சியை தடுப்பது.
காரணம், அந்த சமயத்தில் காட்டுப்பள்ளியில் L&T நிறுவனம் ஒரு Container துறைமுகத்தை அமைத்தது.
இந்த பறக்கும் சாலையை தடுத்தால் சரக்குகளை கையாள நேரமாகும். எனவே எல்லா கப்பல்களும் காட்டுப்பள்ளி L&T துறைமுகத்திற்கு சென்று விடும்.
காட்டுப்பள்ளி என்பது தற்போதைய துறைமுகத்தில் இருந்து சுமார் 1 மணி நேர பயணம்.
6 ஆண்டுகள் கழித்து
செல்வி ஜெயலலிதா இறந்த பிறகு முதலமைச்சராக வந்த திரு. பன்னீர்செல்வம் அன்றையை மத்திய அமைச்சர் திரு. பொ.ராதாகிருஷ்ணனுடன் இணைந்து சென்னை - துறைமுகம் பறக்கும் சாலையை மீண்டும் ஆரம்பிக்க திட்டம் வகுத்தனர்.
நமக்கு நினைவிருக்கலாம், ஜெயலலிதா அம்மையார் இறந்த இரண்டாவது நாளே அன்றைய ஒன்றிய இணை அமைச்சர் சொன்னார், ஊடகங்கள் மூலமாக பேட்டி கொடுத்தார், இந்த திட்டம் மீண்டும் துவங்கும் என்றார்.
கூடுதல் செலவாகும் என்ற போதிலும் அதற்கு ஒப்புதல் பெற்று Re Tender விட இருந்த நேரத்தில்...
காட்டுப்பள்ளி L&T துறைமுகத்தை பிரதமரின் அருமை நண்பர் திரு கௌதம் அதானி வாங்கி விட்டார்.
அதற்கு பிறகு திரு. பொ.ராதாகிருஷ்ணனோ புதிய முதலமைச்சர் திரு. பழனிச்சாமியோ இதைப் பற்றி வாய் திறப்பதில்லை.
இதில் இன்னொரு பெரிய பிரச்சனையை உருவானது. இன்று
சென்னைத் துறைமுகம் ஒரு Quasi (பாதி அரசு சார்ந்தது) . இன்று கேட்பாரற்று கிடக்கிறது.
மொத்தமாக கொத்தவால்சாவடியை கோயம்பேடு கொண்டு போவதில்லை ஒரு நீண்ட வரலாறு கொண்ட துறைமுகத்தை மாற்றுவது. சென்னை மண்ணடிப்பட்டு பகுதியே இந்த துறைமுகத்தை நம்பியே இயங்குகிறது. சுமார் 2000 சிறு மற்றும் பெரு நிறுவனங்கள் துறைமுகம் சார்ந்து தொழில் நடத்துகின்றன. சில லட்சம் பேர் நேரடியாகவும் பல லட்சம் பேர் மறைமுகமாக பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.
எவ்வளவு பண விரயம்?, நேர விரயம்?, எரிபொருள் விரயம்?, எவ்வளவு சுற்றுச்சூழல் சீர்கேடு?
எவ்வளவு எவ்வளவு எவ்வளவு இன்னும் எவ்வளவோ.
அதற்கு ஒரே ஒருஒரு மட்டுமே காரணம்.
ஒரு பெண்மணியின் தனிப்பட்ட ஈகோ மற்றும் முந்தைய அரசு மீதும் ஆட்சியாளர்களின் மீதும் இருக்கும் காழ்ப்புணர்ச்சி.
மொத்தத்தில் எல்லா தமிழக எதிரிகள் ஒன்று சேர்ந்து, தமிழ்நாட்டு மக்களின் வாயில் கடற்கரை மணலை கொட்டி நிரப்பி விட்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக