ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எப்படி விட்டுத் தருவது என ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. தேர்தலில் செலவு செய்தது யார்? 234 தொகுதிகளிலும் உழைத்தது யார்? கொங்கு மண்டலத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம் எப்படி விட்டுக் கொடுப்பது என்று இபிஎஸ் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது. அதேபோல் எத்தனை முறை விட்டுத் தருவது என ஓபிஎஸ்க்கு ஆதரவாகக் கடம்பூர் ராஜு பேசியதாகவும் கூறப்படுகிறது. வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு அறிவித்ததால்தான் தென்மாவட்டத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம் என ஓபிஎஸ் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இறுதியாக எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் மலரஞ்சலி செலுத்த இருதரப்பினரும் வாக்குவாதத்துடனே கலைந்து சென்றன
வெள்ளி, 7 மே, 2021
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்ததால் தான் தோற்றோம்'' - இபிஎஸ், ஓபிஎஸ் இடையே கடும் வாக்குவாதம்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக