Abilash Chandran : நடிகர்களின் சர்வாதிகார மனம்
கமல், சீமான் போன்றோருக்கு ஜனநாயக நம்பிக்கை இல்லை என நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன்.
இந்த பொதுப்பண்பை எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிடமும் கண்டோம்.
நட்சத்திர வெளிச்சத்தில் மிகையான புகழ், ஈகோவுடன் வளரும் நாயக நடிகர்களுக்கு ஒரு கட்டத்தில் இந்த பெருக்கப்பட்ட ஊடக பிம்பத்துக்கும் உண்மைக்குள் வித்தியாசம் தெரியாதபடிக்கு மனக்குழப்பம் ஏற்படும்.
தானே தன் பிம்பம் என நம்பத் தொடங்கி அதை முன்னெடுப்பவர்களை தன் நட்பு வட்டத்தில் வைத்துக் கொள்வார்கள்.
இதை தொடர்ந்து நிகழ்த்தி நிஜமாக காட்ட ரசிகர் மன்றங்களை நடத்தி படவெளியீடுகளை கொண்டாட்டமாக மாற்றுவார்கள்.
அப்படத்தில் வேலை செய்த யாருமே முக்கியமில்லை, தானே அனைத்துக்கும் மையம் என சித்தரிப்பார்கள்.
இந்த சித்தரிப்புக்கு வணிக லாபம் கிடைப்பதால் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் இதற்கு உடன்படுவார்கள். அடுத்து இந்த செயற்கையாக தோற்றுவிக்கப்பட்ட பிம்பத்தை முதலீடு செய்து தமது மிகையான சம்பளத்தை நியாயப்படுத்துவார்கள்.
அந்த வியாபாரம் படுக்கத் தொடங்கியதும் அந்த பிம்ப அரசியலை சினிமாவிலும் பயன்படுத்த முயல்வார்கள்.
அங்கும் அதே ரசிக மன்றங்கள், அதே ஸ்பான்சர்கள், ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க புகழுரைகள், ஊடக வெளிச்சம் என வலம் வரப் பார்ப்பார்கள்.
கடைசி வரை மக்கள் பிரச்சனைகளுக்கான தீர்வுகள், சமூக மேம்பாட்டுக்கான கொள்கைகள் எதுவும் அவர்களிடம் இருக்காது.
அடுத்து கட்சி அரசியலில் ஈடுபடத் தொடங்கியதும் இந்த தன்னை மையப்படுத்திய மிகை பிம்ப கதையாடல்கள் அகங்காரம் எனும் நிலையில் இருந்து சர்வாதிகார விழைவு எனும் ஆபத்தான கட்டத்துக்கு தடம் மாறும்.
என் பேச்சை கேட்காதவர்கள் உயிருடன் இருக்கக் கூடாது என்பது தொடங்கி, அனைவரும் காலில் விழ வேண்டும்,
என்னை மறுப்பவர்களிடம் கட்சிக்காரர்கள் பேசக் கூடாது, அவர்களை பச்சை மட்டையால் அடிப்பேன், என்னை எல்லாரும் சதா புகழ வேண்டும்,
சமூகம் முன்னேற நினைப்பவர்களிடம் சர்வாதிகாரமும் வெளிப்படும், நானே சர்வாதிகாரி என இந்த பிதற்றல்கள், கோரல்கள், கூச்சல்கள் வளர்ந்து கொண்டே போகும்.
கமல் இவ்விசயத்தில் ஒரு மென்மையான சீமான். அவ்வளவு தான்!
அவர் கமீலா நாசரை பதவி விலக்கியது, தன் தொகுதி தவிர வேறெங்கும் பிரச்சாரத்துக்கு செல்லாதது, கட்சியின் கொள்கை என்னவெனக் கேட்டால் தன்னைப் பற்றி பேசி தற்புகழ்ச்சியில் ஈடுபடுவது,
டார்ச்சை உதவியாளர்கள் மீது வீசி எறிவது என இந்த குணாதசியத்தை கண்டோம்.
முதல் பலியாடு வெளியே வந்து உண்மையை கக்கி விட்டது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக