கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தே வருவதால் பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் படுக்கைக்கும், ஆக்சிஜனுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லி, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களிலிருந்து வெளியாகும் செய்திகள் ஒவ்வொரு நாளும் அச்சத்தையே ஏற்படுத்துகிறது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 2,06,65,148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,26,188 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 15 கோடிக்கும் மேல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய மூலக்கூறு உயிரியல் மையத்தின் இயக்குநர் டாக்டர் ராகேஷ் மிஸ்ரா, கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது என நாங்கள் மத்திய அரசுக்கு மார்ச் மாதமே எச்சரிக்கை செய்திருந்தோம் எனத் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து டாக்டர் ராகேஷ் மிஸ்ரா கூறுகையில், "நாங்கள் கொரோனா இரண்டாம் அலை பரவல் குறித்து முன்னரே குரல் எச்சரிக்கை விடுத்திருந்தாம். நாம் ஆபத்தை நோக்கி சென்றுகொண்டிருப்பதற்கு அது ஒரு எச்சரிக்கையாக இருந்தது. இது தொடர்பாக மத்திய சுகாதார செயலாளரிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது பிரதமர் மோடியிடம் சென்றடைவில்லை என்பதை நம்ப முடியவில்லை.
உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் தொற்று மற்றும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நாங்கள் முன்னரே மத்திய அரசை எச்சரித்தோம்" எனத் தெரிவித்துள்ளார்.
விஞ்ஞானிகள் மார்ச் மாதமே எச்சரிக்கை செய்தபோதும், மேற்கு வங்க மாநில தேர்தலில் பெற்ற பெறவேண்டும் என்பதற்கான ஒட்டுமொத்த இந்தியாவையே கொரோனாவுக்கு காவு கொடுத்துள்ளது மோடி அரசு என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக