திங்கள், 9 மார்ச், 2020

இத்தாலியில் ஒரே நாளில் 50 பேர் பலி.. .ஈரானில் ஒரே நாளில் 49 பேர் பலி.. மிரட்டும் கொரோனா

Coronavirus: death toll jump in Iran and Italy By Velmurugan P - /tamil.oneindia.com:
தெஹ்ரான்: சீனாவைத் தொடர்ந்து ஈரானில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது, இன்று ஒரே நாளில் 49 பேர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் 80க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி விட்டது . குறிப்பாக கோவிட்-19 வைரஸ் எனப்படும் கொரோனா வைரஸ் ஈரான், தென்கொரியா, இத்தாலி ஆகிய அதிவேகமாகப் பரவி பலரை காவு வாங்கி வருகிறது.
இதேபோல் தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா உள்ளிட்ட நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது.

சீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,042 ஆக அதிகரித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்துள்ளது.
இத்தாலியில் இன்று ஒரே நாளில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்து உள்ளது. ஒட்டுமொத்தமாக அங்கு 5583 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒரே நாளில் 1000த்தை தாண்டி உள்ளது. அந்த அளவுக்கு வேகமாக பரவி வருகிறது.
இதற்கிடையே ஈரானிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பலர் உயிழந்துள்ளனர். இன்று ஒரே நாளில் 49 பேர் உயிரிழந்துள்ளனர. இதுவரை ஒட்டுமொத்தமாக 195 பேர் ஈரானில் உயிரிழந்துள்ளனர். இன்று ஒரே நாளில் சுமார் 743பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அந்நாட்டு அமைச்சர்கள் உள்பட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரானில் ஒட்டுமொத்தமாக 6000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய நிலவரப்படி உலக அளவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 19 பேர் உயிரிழந்தனர். உலக அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3500ஐ தாண்டி உள்ளது.
இந்நிலையில் ஈரானில் கொரானா வைரஸ் பரவுவதை தடுக்க ஏப்ரல் மாதம் முடிய அனைத்து பள்ளி, கல்லூகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. அதுபோலவே சமூக, மத, விளையாட்டு, கலாச்சார நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை: