எதிர்வரும்
பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக்
கூட்டமைப்பு சைவ வேட்பாளர் ஒருவரை மன்னார் மாவட்டத்தில் நிறுத்தவேண்டும் என தமிழ் தேசியக கூட்டமைப்பை கேட்கின்றார் சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம். >
அவ்வாறு சைவ வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படவேண்டும் என்பதற்கு அவர் 19 காரணங்களை பட்டியலிட்டுள்ளார். அவை வருமாறு.. 1. நானாட்டான் பிரிவில் அருவி ஆற்றங்கரையில் பாழடைந்த சைவக் கோயிலுக்கு அருகில் சட்டத்தை மீறித் தூண் அமைத்து மரியாளுக்கு உருவச்சிலையை திடீரெனச் சாலையோரத்தில் உருவாக்கியுள்ளார்கள். சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.
2. திருக்கேதீச்சரக் கற் கோயிலை உடைத்து மன்னார்க் கோட்டையையும் ஊர்காவற்துறைக் கடல் கோட்டையையும் கட்டிய போர்த்துக்கேயர் காலம் தொடக்கம் நேற்று அருவி ஆற்றங் கரையில் மரியாள் சிலையை வைத்த காலம் வரை மன்னார் மாவட்டம் முழுவதையும் கத்தோலிக்க மயமாக்கும் முயற்சியில் வெற்றிபெற்றே வருகின்றனர். சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.
3. திருக்கேதீச்சரம் கோயில் வாயிலில் மாந்தைச் சந்தியில் 1964 வைத்தியநாதன் - எமிலினியாசுப்பிள்ளை உடன்பாட்டை மீறி 2010 தொடக்கம் உலூர்தம்மாள் தேவாலயத்தைக் கட்டினர். சைவர்களின் மனத்தில் ஆறாப் புண் தந்ததே இந்த நிகழ்வு. சிங்களவர் ஒப்பந்தங்களை மீறுகிறார்கள் என ஆயர் இராயப்பு மதகுரு இம்மானுவேல் போன்றோர் செனீவா உள்ளிட்ட உலக அரங்குகளில் கூறுவர். மன்னாரில் ஆயரே உடன்பாடுகளை அப்பட்டமாக மீறுவர். சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.
4. கட்டையடம்பன் அரசுப் பள்ளியில் கத்தோலிக்க அருள் நங்கை முதல்வராக இருந்து கொண்டு சைவப் பிள்ளைகள் நெற்றியில் நீறும் பொட்டும் அணியக்கூடாது பூ வைக்கக்கூடாது என்று அராஜகமாக ஆணையிட்டார். பின் கல்வி வலயத்தார் தலையிட்டனர். சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.
5. மூன்றாம் பிட்டியில் நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக உங்கள் ஆதரவுடன் கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் அம்மன் கோயிலுக்குச் செல்லும் பாதையை மறித்து முள்கம்பி வேலி அமைத்தார். சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை. சைவ அன்பர் தலையிட்டு நான்கே நாள்களில் பாதையைத் திறந்தார்.
6. முழுக்க முழுக்கச் சைவர்கள் வாழும் வெள்ளாங்குளம் கிராமத்தில் தேவன்பிட்டிக் கத்தோலிக்கர் எட்டு அடி உயரச் சிலுவையை நிறுவினர். பின்னர் வெள்ளாங்குளம் வந்தனர், சைவக் கோயில்களைத் தாக்கினர். சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை. களத்துக்கு வந்தவர், சைவருக்கு ஆறுதல் கூறியவர் சைவ அன்பரும் தமிழகச் சைவ அன்பர்களுமே.
7. வண்ணான்குளம் கிராமத்தில் பெரும்பான்மையாகச் சைவர்கள் வாழும் அவ்வூரில் சைவர்கள் செல்லும் கோயில்களின் பெயர்ப் பலகையை அகற்றினர் கிறித்தவர். சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.
8. சிலாவத்துறையில் புதுக்குடியிருப்பில் அரச காணியில் எவ்வித உரிமமும் இன்றிக் கத்தோலிக்கக் கோயில் ஒன்றைப் பாதிரியார் கட்டியதும் அல்லாமல் அங்கு வாழ்கின்ற சைவர்களை மிரட்டுவதற்குக் கத்தோலிக்கர்களை அழைத்துச்சென்றாரே காணொளி ஆதாரம் உண்டே. சைவர்களைக்கு ஆறுதல் சொல்ல யார் வந்தார்கள்? சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.
9. அரசின் நிதி பெற்று, எந்த அநுமதியும் பெறாமல் சிலாவத்துறையில் புதுக்குடியிருப்பில் அந்தத் தேவாலயத்தையும் சைவர்களுக்காக ஒதுக்கிய நிலப் பகுதியையும் இணைத்து மதில் கட்டக் கத்தோலிக்கர் முயன்றபோது தடுக்கச் சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.
10. ஆள்காட்டிவெளி, தள்ளாடி என சைவக் கிராமங்களில் பிள்ளையார் கோயில்களை உடைப்பதும், சைவர்கள் மீளக் கட்டியதை மீண்டும் உடைப்பதுமாக மதவெறியர் நல்லிணக்கத்தைக் குலைக்க முற்படுகையில் சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.
11. சைவர்களின் நந்திக்கொடியைக் காலால் மிதித்தார்கள். மகாசிவராத்திரிக்கான வளைவை உடைத்தார்கள். வன்னித் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் கண்டிக்கவிலலை, நாடாளுமன்றத்தில் கண்டனம் தெரிவிக்கவில்லை. உடைத்த குண்டர்களுக்கு மறைமுகமாக அளித்த ஆதரவும் தமிழர் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர் அவர்களைப் பிணையில் எடுத்த சோக நிகழ்வும் மன்னார் மாவட்டச் சைவர்களை, உங்களுக்கு வாக்களித்த சைவர்களைத் துயரத்தில் சோகத்தில் துன்பத்தில் மீறாத அழுகையில் ஆழ்த்தியுள்ளது. சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.
12. தலைமன்னாரில் சைவர்களின் எதிர்ப்பை மீறி சாலை வாயிலில் கத்தோலிக்க வளைவு கட்ட முயன்றார்கள். சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை. வழக்கு நீதிமன்றத்தில்.
13. திருக்கேதீச்சர சைவச் சின்ன வளைவு ஏ32 வாயிலில் கிறித்தவ அடையாளச் சிலை ஒன்றை வைத்துள்ளார்கள். சைவர்களை அவமதிக்கிறார்கள். சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.
14. கற்கடந்த குளம் கற்குளம் எனப் பல ஊர்களில் சைவர்கள் கணிசமாக வாழ்ந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர் நிதி பெற்று ஏ32 சந்திப்புச் சாலைகளில் கிறித்தவச் சின்ன வளைவுகள் கட்டி உள்ளார்களே. சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.
15. செட்டியார்மகன், அருகிலுள்ள கிராமம். 100 சைவக் குடிகள். நாடாளுமன்ற உறுப்பினர் ஆபிரகாம் சுமந்திரன் துணைத்தலைவராக உள்ள மெதடிஸ்த திருச்சபையினர் 70 குடிகள் வரை மதம் மாற்றி உள்ளனர். செபக் கூடங்களை அமைத்தனர். சைவக் கோயில்களை இடித்தனர். சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.
16. கத்தோலிக்கரும் முகமதியரும் மன்னார் மாவட்டச் சைவர்களைக் குறிவைத்து மதம் மாற்றுகிறார்கள். சைவர்கள் தமக்காகப் பேச, குரல் கொடுக்கத் தலைமை இன்றித் தவிக்கிறார்கள்.
17. வெற்றி பெற்றபின் உங்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மன்னார் மாவட்டச் சைவர்களுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இழைத்து வரும் கொடுமைகளை அநீதிகளை குற்றங்களை தீமைகளை சைவ வாக்காளர் இப்பொழுது அடுக்கடுக்காகச் சொல்கிறார்கள். என் செய்தோம் என் செய்தோம் என உங்களுக்கு வாக்களித்த தம் தவறை உணர்ந்து தலையில் அடித்து அழுகிறார்கள்.
18. மன்னார் மாவட்டச் சைவ மக்களுக்குத் தலைவராகச் சைவர் நலம் காக்கும் சைவ சமயத்தவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தால் சைவர்களுக்கு எதிரான இந்தக் கொடுமைகள் குறையும். சைவர்களின் எதிர்ப்புக் குரல் வலுவடையும்.
19. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மன்னாரைச் சேர்ந்த சைவர் நலம் பேணும் சைவ சமயத்தவரான கட்சி உறுப்பினர் ஒருவரை 2020 நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்துக. அவ்வாறு அமையாத பட்சத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளருக்கு வாக்களித்து என் செய்தோம் என் செய்தோம் என வாக்களித்த தம் தவறை உணர்ந்து தலையில் அடித்து அழுவோர் தமக்குத் தலைமை தாங்கித் தம் துயர் தீர்க்கும் மன்னார் மாவட்டச் சைவர் ஒருவருக்கே வாக்களிப்பர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக