திங்கள், 9 மார்ச், 2020

அதிமுக ராஜ்ய சபாவுக்கு .. ஜி கே வாசன் ,தம்பிதுரை, கே.பி.முனுசாமி ஆகியோர்

ஜி.கே.வாசன்மாநிலங்களவை தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்புமாலைமலர் : மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிமுக அறிவித்துள்ளது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாகா தலைவர் ஜி.கே.வாசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் போட்டியிடும் தம்பிதுரை, கே.பி.முனுசாமி
பாராளுமன்ற மாநிலங்களவையில் தற்போது எம்.பி.க்களாக இருக்கும் 55 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந் தேதியுடன் முடிவடைகிறது. தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும் திருச்சி சிவா (தி.மு.க.), டி.கே.ரங்கராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), சசிகலா புஷ்பா (அ.தி.மு.க.), விஜிலா சத்யானந்த் (அ.தி.மு.க.), மேட்டுப்பாளையம் செல்வராஜ் (அ.தி.மு.க.), முத்துக்கருப்பன் (அ.தி.மு.க.) ஆகிய 6 பேரின் பதவிக்காலமும் நிறைவடைகிறது.

இந்த காலியிடங்களுக்கு புதிய எம்.பி.க்களை தேர்வு செய்வதற்காக வருகிற 26-ந் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு, இன்று மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், அதிமுக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் கே.பி.முனுசாமி, தம்பிதுரை, ஜி.கே.வாசன் ஆகியோர் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தரவேண்டும் என மற்றொரு கூட்டணி கட்சியான தேமுதிக தொடர்ந்து கூறி வந்த நிலையில், அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை

கருத்துகள் இல்லை: