வியாழன், 9 ஜனவரி, 2020

தர்பார் ரிலீஸ்: தமிழ்ராக்கர்ஸும் களத்தில் ? Darbar Full Movie Download Threat From Tamilrockers

tamil.indianexpress.com :  அதையும் மீறி படத்தை வெற்றிப் படமாக்குவோம் என இணையதளத்தில் சூளுரைத்து வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள். TamilRockers Threat To Darbar Movie And Challenge From Rajinikanth Fans:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படம் ஜனவரி 9-ல் ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. பழைய வசூல் சாதனைகளை தர்பார் முறியடிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதற்கிடையே வழக்கம்போல தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தின் மிரட்டல், தர்பார் படத்தையும் விட்டு வைக்கவில்லை.
ரஜினிகாந்தின் பேட்ட, கடந்த பொங்கலுக்கு வெளியாகி பட்டையைக் கிளப்பியது. இந்தப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு லைக்கா தயாரிப்பில் தர்பார் படம் தயாராகியிருக்கிறது. இதில் நயன்தாரா நடித்திருக்கிறார். ஏ.ஆர். முருகதாஸ் படத்தை இயக்கியிருக்கிறார். பொங்கலுக்கு முன்பாக ஜனவரி 9-ம் தேதியே (வியாழக்கிழமை) தர்பார் ரிலீஸ் ஆகிறது.
ஒவ்வொரு புதுப்படத்தையும் ரிலீஸ் தினத்தன்றே திருட்டுத்தனமாக வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ், தர்பார் படத்தையும் வெளியிடக்கூடும் என்பதை ரஜினி ரசிகர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதையும் மீறி படத்தை வெற்றிப் படமாக்குவோம் என இணையதளத்தில் சூளுரைத்து வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

ரஜினி சிவா என்பதவர் தனது ட்விட்டர் பதிவில், ‘தமிழ்ராக்கர்ஸும், போலி விக்கிபீடியா உருவாக்குகிறவர்களும் தள்ளி நில்லுங்கள். பேட்ட படத்திற்கு முதல் நாளே முழு கதையையும் ஒருவர் விக்கிபீடியாவில் பதிவிட்டார். அதையும் மீறி 5 முறை, 10 முறை படத்தை ரஜினி ரசிகர்கள் பார்ப்பார்கள்’ என குறிப்பிட்டிருக்கிறார் அவர்.
இதேபோல ரஜினி ரசிகர்கள் பலர் தமிழ் ராக்கர்ஸுக்கு சவால் விட்டு பதிவுகளை வெளியிட்டிருக்கிறார்கள். உலக அளவில் 7 ஆயிரம் ஸ்க்ரீன்களில் திரையிடப்படும் தர்பார், பிரீ ரிலீஸ் கலெக்‌ஷனாக மட்டும் 200 கோடி ரூபாயை குவித்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. சென்னையில் திரையிடப்படும் தியேட்டர்களில் அடுத்த சில நாட்களுக்கு டிக்கெட் முன்பதிவு முழுமையாக முடிந்திருக்கிறது.

கருத்துகள் இல்லை: