தினமலர் : நியூயார்க் : ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 80 அமெரிக்க வீரர்கள் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதனால் அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த பதற்றம் காரணமாக இந்தியா உள்ளிட்ட 26 நாடுகள் அவசர ஆலோசனை நடத்தின. டிரம்ப் '
கூல்' டுவீட் : ஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதியான குவாசிம் சுலைமானியை, அமெரிக்க படைகள் ஈராக்கில் கொன்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாக்தாத் நகரில் உள்ள அமெரிக்க அல் ஆசாத் விமான படை தளம் மீது ஈரான் அடுத்தடுத்து 9 முறை ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 80 அமெரிக்க வீரர்கள் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் ஈரான் - அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ஆனால் இந்த தாக்குதல் தொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ஆல் இஸ் வெல்.
2 அமெரிக்க விமானப்படை தளங்கள் மீது ஈரானில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்போது உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. பரவாயில்லை. இது நல்லது தான். எங்களிடம் சக்திவாய்ந்த ஆயுதங்கள், ராணுவம் உள்ளது. நாளை காலை இது பற்றி அறிக்கை அளிப்பேன் என குறிப்பிட்டுள்ளார். தற்காப்பிற்காகவே தாக்குதல் : ஐ.நா.,வின் சட்டவிதி 51 ன் படி, எங்கள் குடிமக்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் தற்காப்பிற்காகவே ஆயுதங்களை பயன்படுத்தி பதில் தாக்குதல் நடத்தினோம்.
நாங்கள் போருக்காக தாக்குதல் நடத்தவில்லை. ஆனால் எங்களை பாதுகாக்க எந்த எல்லைக்கும் சென்று, பதிலடி கொடுப்போம் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜவாத் ஜரீப் தெரிவித்துள்ளார்.
ஈராக் செல்ல வேண்டாம் : இதனிடையே, மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், எந்தவித அவசியமும் இன்றி ஈராக் செல்ல வேண்டாம். ஈரான், ஈராக், வளைகுடா நாடுகளுக்கு இந்திய விமானங்கள் செல்ல வேண்டாம். ஈரான் வான்வெளியை பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும் . ஈராக்கில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பயணம் செல்வதை தவிர்க்க வேண்டும். என தெரிவித்துள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக 26 நாடுகள் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றன

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக