vikatan.com - எம்.குமரேசன் :
முத்தூட் நிறுவனத் தலைவர் ஜார்ஜ் அலெக்ஸாண்டரை நோக்கி 5 கிலோ எடையுள்ள கல் வீசப்பட்டது.
பிரபல முத்தூட் நிதி நிறுவனத்தில் பல ஆண்டுக்காலமாக ஊழியர்கள் பிரச்னை
இருந்து வருகிறது. சமீபத்தில், முத்தூட் நிறுவனத்தின் 43 கிளைகளில் இருந்து
160 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். வேலை நீக்கத்தை எதிர்த்து
சி.ஐ.டி.யூ தொழிற்சங்கம் போராடி வருகிறது. இந்த நிலையில், இன்று காலை
கொச்சி ஐ.ஜி அலுவலகம் அருகே முத்தூட் நிறுவன அதிபர் ஜார்ஜ் அலெக்ஸாண்டர்
காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, திடீரென கார் கண்ணாடியை
உடைத்துக்கொண்டு பெரிய கல் ஒன்று அவர் தலையின் பின்பக்கத்தைத் தாக்கியது.
vikatan.com
தலையில் பலத்த காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளார். சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள்தான்
ஜார்ஜின் காரை பின்தொடர்ந்து, சென்று கல்லை வீசியதாகச் சொல்லப்படுகிறது.
ஜார்ஜ் மீது வீசப்பட்ட கல் 5 கிலோ எடை கொண்டது என போலீஸ் தரப்பில்
சொல்லப்படுகிறது. இருக்கை மீது சேர்ந்து கல் விழுந்ததால் ஜார்ஜ் உயிர்
தப்பியதாகச் சொல்லப்படுகிறது
இந்தச் சம்பவம் தொடர்பாக முத்தூட் நிறுவனம்
தரப்பில் கூறுகையில், “ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த
தொழிற்சங்கம்தான் எங்களுக்குத் தொடர்ந்து பிரச்னையை கொடுத்து வருகிறது.
எங்கள் மேலாண்மை இயக்குநரின் காரை சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தினர் மூன்று
கார்களில் பின்தொடர்ந்து சென்று இந்தச் செயலை செய்துள்ளனர். கல் வீசியவர்
யார் என்று எங்களுக்குத் தெரியும்.
அவர் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், போலீஸ் நடவடிக்கை எடுக்கத்
தயங்குகிறது. மேலும், போராட்டத்தில் ஈடுபட மறுக்கும் எங்கள் ஊழியர்களையும்
சி.ஐ.டி.யூ-வினர் தாக்குகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் எங்கள்
ஊழியர்கள் 20 பேர் தாக்கப்பட்டுள்ளனர்” என்று குற்றம் சாட்டியுள்ளது.
சி.ஐ.டி.யூ தரப்போ குற்றச்சாட்டை மறுத்துள்ளது. `வன்முறையில் எங்களுக்கு
என்றும் நம்பிக்கை இருந்தது இல்லை’ என தெரிவித்துள்ளது.
நாட்டின் முன்னணி நிதி நிறுவனங்களுள் முத்தூட் நிறுவனமும் ஒன்று. நாடு
முழுவதும் 3,600 கிளைகள் உள்ளன. கேரளாவில் மட்டும் 600 கிளைகள்
செயல்படுகின்றன. 30,000 ஊழியர்கள் இங்கு பணிபுரிகின்றனர். கடந்த 2016-ம்
ஆண்டு முதல் தற்போது வரை முத்தூட் நிறுவனம் கேரளாவில் 66 சதவிகித
வர்த்தகத்தை இழந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது h.manoramaonline.com/news/kerala/2020/01/07/muthoot-finance-md-suffers-head-injury-in-attack-by-alleged-citu-men.html" rel="noopener" target="_blank">Onmanoramavikatan.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக