ஞாயிறு, 5 ஜனவரி, 2020

தஞ்சாவூரில் வட மாநில நிறுவனங்களுக்கு எச்சரிக்கை ... கடைகளுக்கு பூட்டு வீடியோ

/tamil.oneindia.com : வட மாநில நிறுவனங்களுக்கு தமிழ் தேசியக் கட்சி எச்சரிக்கை - வீடியோ
தஞ்சாவூர்: தமிழர்களின் வேலை வாய்ப்புகளைப் பறிக்கும் வட மாநிலத்தவர்கள் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் கிளர்ச்சி வெடிக்கும் என்று தமிழ் தேசியக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வட மாநிலத் தொழிலாளர்கள் பல மடங்கு அதிகரித்து விட்டனர். ஹோட்டல் வேலை, கட்டுமானத் தொழில் மட்டுமல்லாமல் இன்று வயல் களில் இறங்கி நாற்று நடும் வேலையிலும் கூட அவர்களை காண முடிகிறது.
வடமாநிலத்தவர்களின் பெருக்கத்தால் தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்தர்களுக்கு வேலை வாய்ப்பு பாதிக்கப்படுவதாக குமுறல் வெடித்துள்ளது. இதையடுத்து தமிழக வேலைகள் தமிழருக்கே என்ற முழக்கம் வலுக்கத் தொடங்கியுள்ளது. இதுதொடர்பான போராட்டங்களும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன.>
< இந்த நிலையில், தஞ்சையில் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் வட மாநிலத்தவர்களின் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்பட்டது. தமிழ்த் தேசியக் கட்சி சார்பில் இந்த நூதனப் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் உள்ள வடமாநிலத்தவர்களின் கடைகளை பூட்டவேண்டும். இது தமிழர்களின் வாழ்வுரிமையை பறிக்கும் செயல் என்ற கோரிக்கையுடன், தஞ்சை புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் ஆர் ஆர் நகர் பகுதியில் அமைந்துள்ள வட மாநிலத்தவர்களின் மார்பிள் கடைகள் மற்றும் ஹோட்டலில் வடமாநிலத்தவர்களே வெளியேறுங்கள் என்று கூறி நோட்டீஸ் ஒட்டப்பட்டது. மேலும் பூட்டும் போடப்பட்டது. 
தமிழகத்தை வெளியேற மறுத்தால் புரட்சி வெடிக்கும் கிளர்ச்சி வெடிக்கும் ஓடிப்போ ஓடிப்போ என்று வெளிமாநிலத்தவர்களை எச்சரிக்கும் வகையில் கதவின் முன் துண்டுப் பிரசுரத்தை ஒட்டி அவர்கள் கடைக்கு பூட்டுப் போட்டு நூதன முறையில் தமிழ் தேசிய கட்சியினர் போராட்டங்களை வெளிப்படுத்தினர்.
இந்தப் போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு நிலவியது. திருச்சியில்: இதேபோல தமிழ் தேசியக் கட்சியின் சார்பாக இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள வட மாநிலத்தவர் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 
இதன்படி அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழ்நேசன் தலைமையில் அக்கட்சியினர் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள வட மாநிலத்தவர் ஒருவரின் கடைக்கு பூட்டு போட முயன்றனர். அப்போது காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கு  மேற்பட்டோரை கைது செய்தனர். 
தமிழ்நேசன் மாநிலத் தலைவர் போரட்டம் குறித்து கூறும்போது, மேலும் இப்போராட்டத்தில், தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் தமிழர்களே பிழைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி அதனை எதிர்த்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். திருமணம் ஆகாதவரா? இ



 Read more at: https://tamil.oneindia.com/news/thanjavur/tamil-desia-katchi-novel-protest-against-north-indian-companies-373233.html

2 கருத்துகள்:

Krishna சொன்னது…

First veli natil irunthu vara companies ah moodunga.
Apramah vada naduku vanga¡¡¡

Unknown சொன்னது…

Tamiz vaazga....