திங்கள், 6 ஜனவரி, 2020

தலைமுடியை விற்று குழந்தைகளுக்கு உணவு... கணவர் தீயில் கருகினார் ... இந்த கொடுமையை .. பாருங்கள் ...

நண்பர்களே..! வழக்கமான பதிவுதானோ என்றெண்ணி தயவு செய்து இந்த
பதிவை கடந்து போய்விடாதீர்கள்... எனக்காகவாவது முழுமையாக படியுங்கள். அதன்பின் கடந்து போக வேண்டுமா? அல்லது ஏதாவது செய்ய வேண்டுமா என்பது உங்கள் விருப்பம்.
ஒரு பெண், வறுமையின் காரணமாக தன் தலைமுடியை மொட்டை அடித்து அந்த முடியை எடைக்குப் போட்டு கிடைத்த சொற்ப பணத்தில் தன் குழந்தைகளுக்கு உணவளித்தார் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?
ஒரு பெண்ணையும் அவள் குழந்தைகளையும் சுற்றி ஒரு கூட்டமே நின்றுக்கொண்டு "செத்துப்போ... செத்துப்போ" என்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
இப்படியான ஒரு சூழலை நம்மில் யாராவது கடந்து வந்திருக்கிறோமா ? நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் இப்படியான சூழலில் ஒரு பெண் வாழ்கிறார் மூன்று குழந்தைகளுடன்!
இனி அவர் கதை என்னவென்று பார்ப்போம்... மேல் கூறிய சூழலில் வாழும் பெண் பெயர் பிரேமா. வயது 31. ஏழு மாதங்களுக்கு முன்புதான் அவர் கணவர் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டு இறந்து போனார் என்பது உப செய்தி.
சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் நன்றாக வாழ்ந்த குடும்பம் தான். கணவன் மனைவி இருவருக்கும் செங்கல் சூளையில் வேலை. இருவருமே நல்ல உழைப்பாளிகள். குடும்பம் மூன்று பிள்ளைகள் என வாழ்க்கை நல்லபடியாக ஓடிக்கொண்டிருந்தது.

இந்நிலையில் தனியாக செங்கல் சூளை தொடங்கலாம் என்று ஒருவர் சொன்ன யோசனையை கேட்டு கணவனும் மனைவியுமாக இணைந்து கிடைத்த இடங்களிலெல்லாம் கடன் வாங்கியுள்ளனர். யோசனை சொன்னவர் இவர்களிடமிருந்து கிட்டத்தட்ட நாலு லட்சம் ரூபாயை வாங்கிக்கொண்டு தலைமறைவாகிவிட்டார்.
வேலை போய்விட்டது. தொழிலும் இல்லை குடும்பம் நடுத்தெருவில் நிற்க... விரக்தியின் உச்சத்தில் அந்த பெண்ணின் கணவர் தீ வைத்துக் கொண்டார். எல்லாம் முடிந்தது..

இந்த நிலையில் பணம் கொடுத்தவர்கள் சற்றும் இரக்கமில்லாமல் அந்தப் பெண்ணைத் தொடர்ந்து வதைக்கிறார்கள். மனசாட்சியுள்ள சிலர் தங்கள் பணத்தை விட்டுக் கொடுத்தாலும். மீதமுள்ள ஆட்கள் தொடர்ந்து தொல்லை தருகிறார்கள்.
இதில் உச்சகட்ட பிரச்சனை என்ன தெரியுமா? சுய உதவி குழு மூலமும் மீட்டர் வட்டி மூலமும் இந்தப் பெண்ணுக்கு பணம் வாங்கி கொடுத்த மற்ற பெண்கள் செய்யும் டார்ச்சர் தான். ஏனெனில் அவர்கள் அடுத்து பணம் கடன் வாங்க, முன்பு வாங்கிய கடனை கட்ட வேண்டும்.
இந்த நிலையில்தான் மிக வெளிப்படையாகவே அந்தப் பெண்ணை தற்கொலை செய்து கொள் என "அறிவுரை" கூறுகிறார்கள். இப்படி வீட்டருகே ஆட்கள் வரும்போதெல்லாம் குழந்தைகள் அப்பெண்ணை கட்டிக்கொண்டு அழுவதை கற்பனை செய்து பார்க்க முடிகிறதா ?
ஒன்று கடனை கட்ட வேண்டும். இல்லையேல் அந்த பெண் தற்கொலை செய்து கொள்ள வேண்டும். இரக்கமற்ற சக மனிதர்கள் அந்தப் பெண்ணிற்கு கொடுத்திருக்கும் இரண்டு ஆப்ஷன்கள் இதுதான். அவர்களுக்கு கணக்கு முடிய வேண்டும் அல்லது காரணம் வேண்டும்..!
நேற்று நான் நேரில் சென்று பார்த்து அவர்கள் நிலையை உறுதி செய்துக் கொண்டேன். வயிற்றுக்கு சாப்பாடு இல்லாமல் தவிக்கும் சகமனிதனை பார்க்கும்போது சட்டென ஒரு வெறுமை சூழ்ந்து கொள்கிறது "நாமெல்லாம் என்னத்துக்குடா இருக்கோம்?" என்று தோன்றுகிறது.
கடந்த வெள்ளியன்று தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயன்றவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காப்பாற்றியுள்ளனர். இப்போதைக்கு இந்தப் பெண்ணும் அவரது குழந்தைகளும் சாப்பிட ஏற்பாடு செய்துவிட்டு வந்திருக்கிறோம்.
"இரக்கம் உள்ள மனிதர்கள் இந்த உலகம் முழுவதும் நிறைந்து கிடக்கிறார்கள். உங்களை செத்துப்போ என்று சொன்ன சமூகத்திடமிருந்து உங்களை காக்க போவதும் இதே சமூகம் தான்.. நாங்கள் இருக்கிறோம் பயப்படாதீர்கள் என்று வாக்குறுதி அளித்து விட்டு வந்திருக்கிறேன்.
நான் நம்பிக்கையுடன் சொன்ன "நாங்கள்" என்பது உங்களையும் சேர்த்து தான் நண்பர்களே. உதவுங்கள் ஒரு குடும்பத்தை காப்போம். அந்தப் பெண்ணுக்கு தொழில். அந்த பிள்ளைகளுக்கு படிப்பு என ஏகப்பட்ட திட்டங்களை போட்டு வைத்திருக்கிறேன். எல்லாவற்றையும் நிறைவேற்ற தோள் கொடுங்கள் தோழர்களே...
----------------------------------------------------
அந்த பெண்ணின் வங்கிக்கணக்கு விவரம் :
Account name : PREMA S
Account number : 050010100093104
IFSC Code : ANDB0000500
Bank : Andhra Bank
Branch : Salem
-----------------------------------------------------------------
நேரில் சந்தித்து உதவ வேண்டும் என்று நினைப்பவர்கள் எந்த நேரமும் என்னை தொடர்புகொள்ளலாம். கைகோர்த்துக்கொள்ள காத்திருக்கிறேன்.
அலைபேசி வாயிலாக அப்பெண்ணை அழைத்து பேச நினைக்கும் நண்பர்களுக்காக அவர் எண்ணை பகிர்கிறேன்...
பிரேமா : 89031 40744
அன்பும் நன்றியும்....
- பாலா

கருத்துகள் இல்லை: