திங்கள், 6 ஜனவரி, 2020

தேர்தல் ஆணைய வெப்சைட்டில் பா.ம.க பெயர் போச்சு,, பா.ம.க-வால்தான் அ.தி.மு.க ஆட்சி' அன்புமணி பேச்சு..

பா.ம.க பெயர் இல்லாத தேர்தல் ஆணைய இணையதளம்...ராமதாஸ், அன்புமணிvikatan.com  ;எஸ்.ஏ.எம். பரக்கத் அலி :
பெரிய கட்சி பா.ம.க என்கிறார் ராமதாஸ். ஆனால், மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் பா.ம.க பெயரே இல்லை. அன்புமணி பேச்சுக்கு பழி வாங்குகிறதா அ.தி.மு.க? 'உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளின்படி தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி பா.ம.க-தான்' என அறிக்கை விட்டிருக்கிறார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ். ஆனால், பா.ம.க-வின் பெயர் மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளில் இல்லை
பா.ம.க பெயர் இல்லாத தேர்தல் ஆணைய இணையதளம் - >விகடன்</ ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் தேர்தல் முடிவுகள் தொடர்ச்சியாக வெளியாகின. தேர்தல் முடிவுகளை வெளியிடுவதற்காக டெம்ப்ளேட்டை அந்த இணையதளத்தில் உருவாக்கியிருந்தார்கள். அந்த டெம்ப்ளேட்டில் அ.தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், பி.ஜே.பி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தே.மு.தி.க, தி.மு.க, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், பா.ம.க பெயர் மட்டும் மிஸ்சிங்.
அ.தி.மு.க கூட்டணியில் அ.தி.மு.க-வுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் பெரிய கட்சி பா.ம.க. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க-வுடன் ஏற்பட்ட கூட்டணி, உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர்ந்தது. தேர்தல் முடிவுகள் வெளியானபோது பா.ம.க-வின் பெயர் பெரிதாக உச்சரிக்கப்படவில்லை. வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு டிசம்பர் 31-ம் தேதி நடைபெற்ற பா.ம.க பொதுக்குழுவில் அன்புமணி பேசிய பேச்சுதான் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பா.ம.க பெயர் இடம்பெறாமல் போனதற்குக் காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.



பொதுக்குழுவில் பொங்கும் அன்புமணி



பொதுக்குழுவில் பொங்கும் அன்புமணி
விகடன்
பா.ம.க பொதுக்குழுவில் பேசிய அன்புமணி, ''நாம், அ.தி.மு.க-வுடன் கூட்டணி சேரவில்லையென்றால் இன்று அ.தி.மு.க ஆட்சியே இல்லை. தமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க-வுக்கு விட்டுக் கொடுத்தோம். அவர்கள் ஆட்சியைத் தொடர வேண்டும் என்றார்கள். அதனால், பா.ம.க விட்டுக்கொடுத்தது. ஆனால், நாங்கள் கேட்டது, கட்சியில் உழைக்கிறவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர் பதவி கொடுங்கள் என்றோம். குறைந்த அளவே கொடுத்தார்கள். ஒரு சீட், அரை சீட், கால் சீட் என அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் ஒதுக்கினார்கள். ஆளும் கட்சியின் தலைமை எங்களது கருத்துகளையெல்லாம் ஏற்று, இனி வரும் காலங்களில் அதைச் சரிசெய்ய வேண்டும்'' எனக் கொஞ்சம் காட்டமாகவே பேசினார்.




அன்புமணியின் இந்தப் பேச்சுதான் அ.தி.மு.க தலைமையைக் கோபப்படுத்தியது. நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க-வுக்கு மற்றவர்களைவிடக் கூடுதல் தொகுதிகள் வழங்கப்பட்டன. அதோடு ராஜ்யசபா எம்.பி பதவியும் தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் யாரும் ஒரு இடத்தைக்கூடப் பிடிக்காத நிலையில் அன்புமணிக்கு ராஜ்யசபா சீட்டை அ.தி.மு.க அளித்தது. அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவோடு அன்புமணி எம்.பி ஆனார். இத்தனைக்குப் பிறகும் பா.ம.க இப்படிப் பேசுவது அ.தி.மு.க-வை கோபப்படுத்தியதால்தான் பா.ம.க-வின் வெற்றி விவரங்களைப் பெரிதாகத் தெரிவிக்க வேண்டாம் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு மறைமுகமாக உத்தரவு போட்டதாக அ.தி.மு.க வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

''பி.ஜே.பி, தே.மு.தி.க பெயர்களையெல்லாம் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிட்டவர்கள், பா.ம.க பெயரை மட்டும் எப்படித் தவிர்த்தார்கள்?'' எனக் கேள்வி எழுப்புகிறார்கள் பா.ம.க-வினர். தமிழகத்தில் பெரிய அளவில் அறிமுகம் இல்லாத திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி ஆகியவற்றின் பெயர்களையெல்லாம் இணையதளத்தில் வெளியிட்ட தேர்தல் ஆணையம், பா.ம.க-வின் பெயரை மட்டும் ஏன் வெளியிடவில்லை. 2011-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது மாநில தேர்தல் ஆணையம் முடிவுகளை வெளியிட்டபோது பா.ம.க-வின் பெயரை ஐந்தாவது இடத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். இப்போது பெயரை முற்றிலும் புறக்கணித்திருக்கிறது.

கடந்த முறை இடம்பெற்ற ம.தி.மு.க பெயர் இப்போது இடம்பெறவில்லை. அ.தி.மு.க-வின் பெயரை முதலில் போட்டுவிட்டு தி.மு.க-வின் பெயரை 8-வது இடத்தில் போட்டிருக்கிறது தேர்தல் ஆணையம். தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க-வின் பெயர் பி.ஜே.பி, சி.பி.ஐ, சி.பி.எம், தே.மு.தி.க கட்சிகளுக்கெல்லாம் அடுத்த இடத்தில் ஒதுக்கியிருக்கிறார்கள்.



2011 தேர்தலில் பா.ம.க பெயர் இடம்பெற்ற தேர்தல் ஆணைய இணையதளம்



2011 தேர்தலில் பா.ம.க பெயர் இடம்பெற்ற தேர்தல் ஆணைய இணையதளம்
விகடன்

திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு முறையே இரண்டாவது மூன்றாவது இடங்கள் அளிக்கப்பட்டிருகின்றன. இந்த முரண்பாடுகளையெல்லாம் பார்க்கும்போது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டே செயல்பட்டிருப்பது போலத் தோன்றுகிறது

கருத்துகள் இல்லை: