According
to the Toronto police, Rachel was walking near campus when a man
reportedly assaulted her. She was found with serious stab injuries.
news
Crime
Friday, January 24, 2020 - 15:26
tamil.indianexpress.com/ :கனடாவில் படித்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த 23
வயது பெண் அடையாளம் தெரியாத மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டதில்
படுகாயம் அடந்தைவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் திவிர...கனடாவில் படித்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த 23 வயது பெண் அடையாளம் தெரியாத மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயம் அடந்தைவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் திவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கனடா நாட்டில் டொரோண்டா நகரில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ரேச்சல் ஆல்பர்ட் என்ற பெண் முதுகலை படித்துவந்தார். ரேச்சல் டொரோண்டொவில் பல்கலைக்கழக வளாகம் அருகே லெய்ட்ச் அவின்யூ அசினிபோயினே சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, புதன்கிழமை காலை 10 மணி அளவில் அடையாளம் தெரியாத மர்ம நபரால் அவரைத் தாக்கி சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இதில் மாணவியின் கழுத்துப் பகுதியில் கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.
இது குறித்த தகவல் அறிந்த ரேச்சலின் குடும்பத்தினர், தனது மகளைப் பார்க்க கனடா செல்வதற்கு விசா நடைமுறைகளை விரைவாக்க உதவி செய்ய வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் உதவியைக் நாடியுள்ளனர்.
மேலும், மாணவி ரேச்சலின் உடல்நிலை ரத்த அழுத்தம் இதயத்துடிப்பு சீராக இருப்பதாவும் இருப்பினும் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.
கனடா போலீசார் பொதுமக்களுடன் உதவியுடன் மாணவி ரேச்சலை தாக்கிய அந்த மர்ம நபரைப் பற்றி விசாரித்துவருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட அந்த நபர் ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர் என்றும் அந்த நபரின் வயது 20களின் மத்தியில் இருக்கும் என்றும் ஸ்டைலான கண்ணாடி அணிந்திருந்தார் என்றும் தெரிவித்துள்ளனர்.
மாணவி தாக்கப்பட்டது குறித்து டொரோண்டோ போலீசார் வழக்குப் பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபரை தேடிவருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக