Ksb Boobathi : தமிழகத்தில்_மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்று சொன்னவர்களை
விட கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றம் வரவேண்டும் என்று சொன்னவர்கள் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை இன்றுவரை இதே நிலைதான் உள்ளது எந்தவொரு மாற்றமும் இல்லை. இயக்குனர்சேரன். என்ன சார் இப்படி புளுகுறீங்க ..!
பத்துக்கும் மேற்பட்ட படங்களை எடுத்துருக்கீங்க பல படங்களில் நடிச்சிருக்கீங்க இதெல்லாம் எப்படி என்று கேட்டால் என்னுடைய உழைப்பு என்று எதிர் பதில் வரும் மறுக்கவில்லை.
இதை மேலூரில் இருந்து வந்த ஒரு சேரனால் எப்படி செய்ய முடிந்தது..? கொஞ்சம் பின்னோக்கி செல்வோம் உங்கள் வயது தோராயமாக 50 என்று வைத்துக் கொள்வோம் .
அதாவது நீங்கள் பிறப்பதற்கு முன்பு உங்கள் தாயாரோ தந்தையாரோ அரசு வேலைகளில் இருந்தவர்கள் என்று படித்துள்ளேன். அன்றைய காலகட்டத்தில் மேலாதிக்க சாதிநிலை தாண்டவம் ஆடியபோது அந்த குக்கிராமத்தில் இருந்த இவர்கள் படித்து எப்படி வேலையில் சேர்ந்தார்கள் என்று யோசித்தது உண்டா..?
அன்றைய காலகட்டத்தில் பெண்கள் வீட்டுவேலை , கூலிவேல போன்ற இடங்களில் மட்டுமே இருப்பார்கள் பிறகு எப்படி அரசுவேலைகளில் பணி அமர்த்தப்பட்டார்கள் என்று யோசித்தது உண்டா..?
மேல்சாதியினர் மட்டுமே படிக்க வேண்டும் என்ற நிலையில் நீங்கள் ஆரம்பகல்வியை , உயர்கல்வியை, பட்டப்படிப்பை எப்படி பெற்றீர்கள் என்றாவது யோசனை செய்தது உண்டா..?
மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் #மதியஉணவு என்ற ஒரு காரணத்தால் மட்டுமே பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிய பெற்றோர்கள் உண்டு தமிழகத்தில். உங்கள் தாய் தந்தை அரசு வேலைகளில் இருந்ததால் ஒருவேளை அதை அறியாமல் இருந்து விட்டீர்களா என்று புரியவில்லை.
பட்டப் படிப்பை ஆரம்பிக்கும் போது எப்படி கல்லூரியில் இடம் கிடைத்தது என்றாவது தெரிந்ததா..? அப்பா அம்மா சேர்த்து விட்டார்கள் என்று நினைத்திருப்பீர் போல்..! #இடஒதுக்கீடு அறியாமல் இருந்த கல்லூரி காலம் எல்லோரும் பொதுவானது தான் நான் கூட மறுக்கவில்லை
ஆனால் அதன்பிறகாவது , இடஒதுக்கீடு பற்றி அறியாதது சமூகத்தின் மீது தவறல்ல அதைப்பற்றி அறியாதவர்கள் மீதுதான் தவறு என்பேன். ஏன் தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் பொழுது கூட தோன்றவில்லையா..?
இதுகூட ,கடந்த நீதிக்கட்சி தொடங்கி #சுயமரியாதை_இயக்கம் மற்றும் திராவிடர்கழகம் , திராவிட_முன்னேற்றக்கழகம் போன்ற தலைவர்களின் படிப்படியான போராட்டங்களாலும் அவர்கள் பேசிய ,உரையாற்றிய பொதுக்கூட்டங்களாலும் மக்களிடையே நம்பிக்கையை பெற்று அதன்மூலம் ஆட்சிக்கு வந்து தான்கொண்ட கொள்கையின்படி ..
இந்த தமிழக மக்களின் சராசரி #கல்வியறிவு_எழுத்தறிவு_சவீதத்தை உயர்த்தி அவர்களுக்கான அடுத்த கட்ட கட்டமைப்பை உருவாக்கி அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய வழிவகுத்தது நீங்கள் மேலே குறிப்பிட்ட மாற்றத்தை உருவாக்கியவர்கள். ஆடியோ வெளியீட்டு விழா மேடையில் பேசும் பேச்சுக்காக பொத்தாம் பொதுவாக பேசவேண்டாம்.
இறுதியாக என் தாழ்மையான கருத்து..! சாதிசனத்தை பற்றி அறிந்த நீங்கள் சமூகநீதியை அறியாதது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று நினைக்கிறேன்.
நன்றியும் வணக்கமும் திராவிடத்தால்_வாழ்ந்தோம்..!
இப்படிக்கு , தங்களிடம் உதவிஇயக்குனராக பணிபுரிய அலைந்த Ksb Boobathi

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக