சனி, 25 ஜனவரி, 2020

சீனா கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி : 10 நாட்களில் 1,000 படுக்கைகள் புதிய மருத்துவமனை

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி : 10 நாட்களில் 1,000 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை அமைக்க அரசு தீவிரம் தினத்தந்தி ;கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக, 10 நாட்களில் 1,000 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை அமைக்க சீன அரசு தீவிரம் காட்டி வருகிறது. பெய்ஜிங், சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 26 ஆக உயர்ந்துள்ளது. யுவான் நகரையும் தாண்டி இந்த வைரஸ் பரவி 830 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது மேலும் பரவாமல் இருப்பதற்காக 5 நகரங்களில் லட்சக்கணக்கானோர் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இந்நிலையில் படுவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க, அந்நாட்டில் விரைவாக புதிய மருத்துவமனை ஒன்றை அமைக்க அந்நாட்டு அரசு தீவிர ஏற்பாடுகள் செய்து வருகிறது. மேலும் புதிதாக அமைய உள்ள இந்த மருத்துவமனை 10 நாட்களுக்குள் 25,000 சதுர மீட்டரில் 1,000 படுக்கைகளுடன் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


கொரோனா வைரசால் இது வரை சீனாவில் 800-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான படுக்கைகள் இல்லாத காரணத்தால் தற்போது புதிய மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மனிதா்களின் சுவாச உறுப்புகள் மூலமே இந்த வைரஸ் பெரும்பாலும் பரவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: