vikatan.com -ராம் சங்கர் ச :
மாநிலங்களவை
எம்.பி.யாக இருந்த லலித் சூரி என்பவரின் தலைமையில் தொடங்கப்பட்டது.
லலித்தின் மரணத்திற்கு பின் அவருடைய மனைவி ஜோத்ஸ்னா சூரி 2006-ஆம் ஆண்டு
இந்த குழுமத்தின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
ஜோத்ஸ்னா சூரியின் பாரத் ஹோட்டல் என்கிற நிறுவனம் நாடு முழுவதும் லலித்
ஹோட்டல் என்கிற பெயரில் ஹோட்டல்களை நடத்தி வருகிறது. டெல்லியில் உள்ள
ஜோத்ஸ்னா சூரிக்கு சொந்தமான 13 வளாகங்களில் வருமானவரி துறையினர் கடந்த
ஜனவரி 19-ம் தேதி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 1,000 கோடிக்கும் அதிக
மதிப்புள்ள கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டுப் சொத்துக்கள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கறுப்பு
பணத்திற்கு எதிராகவும் வெளிநாட்டு சொத்துகளை பதுக்கியுள்ளதற்கு எதிராகவும்
அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பாரத் ஹோட்டல் நிறுவனம் கணிசமான
வெளிநாட்டு சொத்துக்களை வைத்துள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் இந்த
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து அந்த அறிக்கையில், “இந்த சோதனையில் ரூ.1,000 கோடி
மதிப்புக்கும் மேலான வெளிநாட்டு சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர அந்த நிறுவனம், சுமார் ரூ.35 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரி
ஏய்ப்பையும் செய்துள்ளது. மிகப்பெரிய அளவிலான கறுப்புப் பணத்தை இந்தக்
குழுமம் பல்வேறு வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளது. முக்கிய நபர்களின்
கறுப்புப் பணமான இதை, 1990-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தங்களின் டிரஸ்ட் மூலமாக
பல ஆண்டுகளாகப் பதுக்கியுள்ளனர்.
வரி விலக்குக்காக ஜோத்ஸ்னா சூரி, தனது உறவினர் ஒருவரை இதில் சேர்த்துள்ளார். சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் இந்த தகவல்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளது. கறுப்பு பண சட்டம் 2015-ன் கீழ் இது தவறாகும். வருமான வரிச் சட்டம் 1961-ன் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், ரூ.71.5 லட்சம் ரொக்கம், ரூ.23 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் ரூ.1.2 கோடி மதிப்புள்ள விலையுயர்ந்த கடிகாரங்கள் என ரூ.24.93 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களுள் ஒன்றான பாரத் ஹோட்டல் குழுமம்,
கடந்த 1988-ஆம் ஆண்டு மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த லலித் சூரி என்பவரின்
தலைமையில் தொடங்கப்பட்டது. லலித் சூரி பிரபல பிஸினஸ்மேனாக அறியப்படும்
அதேவேளையில் அரசியல்வாதியாகவும் இருந்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம்
சார்பாக ராஜ்ய சபா உறுப்பினராக 2002 – 2006ம் ஆண்டு வரை இருந்தவர்.
அதன்பின் அவர் மரணமடைந்தார். லலித்தின் மரணத்திற்கு பின் அவருடைய மனைவி ஜோத்ஸ்னா சூரி 2006-ஆம் ஆண்டு இந்த குழுமத்தின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டார். தற்போது, பாரத் ஹோட்டல் குழுமம் நாடு முழுவதும் 12-க்கும் மேற்பட்ட சொகுசு ஹோட்டல்களை வைத்துள்ளனர். லண்டனிலும் அவர்களுக்கு சொந்தமான சொத்துகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
vikatan.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக