வியாழன், 28 நவம்பர், 2019

அண்ணன் ஒரு இயக்கம் தம்பி வேறொரு இயக்கம் யார் துரோகி? யார் போராளி?

Eela Mani : மாவீரத் தாயா?  மாதுரோகத் தாயா?  அரை மாவீரர்,  அரைத் துரோகத் தாய்க்குலமா ? 
மாவீரர்தின சிந்தனை 2019 கிழக்கு மாகாணம் மட்டக்கிளப்பில் இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, யுத்த நிறுத்தம் ஏற்பட்டிருந்த காலத்தில் மட்டக்கிளப்பில் மோட்டார் வாகனமொன்றில் சென்றுகொண்டிருந்த PLOTE இயக்க போராளிகள் மீது (13 09 1987) கண்ணி வெடித்தாக்குதல் நடத்தினார்கள் புலிகள். வாசுதேவா ,கண்ணன் போன்ற ஆளுமை மிக்க தலைவர்கள் துரோகிகள் என்ற போர்வையில் படுகொலை செய்யப்பட்டனர்
சிறை மீண்டு, மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு, களுவாஞ்சிகுடி போலீஸ் நிலைய தாக்குதலில் (22 09 1984) வீரமரணமடைந்த கிழக்கு மாகாணம், கல்லடியை சேர்ந்த மாவீரன் பரமதேவா புலிகளின் முன்னணித்தலைவர்களில் ஒருவர். அவரின் சகோதரர் தான் வாசுதேவா. அவர் போராடியதும் தமிழீழ மண்ணின் விடுதலைக்காகத்தான். PLOTE இயக்கத்தில் இணைந்து போராடியதால் அவன் துரோகியா???
வாசுதேவா ,பரமதேவாவின் தயார் அரைமாவீரர் அரைத்துரோகத் தாயா ???

வடமாகாணம் நாவலியிலும் இரண்டு சகோதரர்கள் , ஜெயக்குமார் இராசநாயகம் TELO இயக்கத்திலும் தேவசகாயம் இராசநாயகம் .புலிகள் இயக்கத்திலுமிணைந்து போராடினார்கள். இயக்கம் தடைசெய்யப்பட்டு சிலமாதங்களின் பின்னர் இந்தியாவிலிருந்து நாடுதிரும்பிய ஜெயக்குமார் இராசநாயகம் புலிகளினால் கைதுசெய்யப்பட்டு கந்தன்கருணை முகாமில் புலிகளின் சித்திரவதைகள் பின் 8 10 1986 அன்று கொல்லப்பட்டார்.அண்ணன் புரட்சிமாறன் புலிகள் இயகத்திற்கு விசுவாசமாக போராடி யாழ்ப்பாணம் கோட்டை தாக்குதலில் 5 08 1990 களப்பலியானார் .
தேவசகாயம் இராசநாயகம். ஜெயக்குமார் இராசநாயகம் சகோதரர்களின் தாயார் அரைமாவீரர் அரைத்துரோகத் தாயா ???

கடந்த கால வரலாற்றுத் தவறுகளை வருங்கால அரசியல் தலைமையேற்க தயாராகும் இளம் சமுதாயத்தினர் தெரிந்துகொள்வதுவும் பாடம் கற்பதுவும் அவசியமல்லவா???
மக்களின் மகிச்சிக்காக போராடி மடிந்த அனைத்துஇயக்கபோராளிகளுக்கும்,யுத்தத்தில் கொல்லப்பட்ட பொது மக்களுக்கும் பொதுவான ஓர் தினத்தில் அஞ்சலி செய்ய நாம் எம்மை தயார் படுத்தவேண்டும்.

கருத்துகள் இல்லை: