ஞாயிறு, 24 நவம்பர், 2019

வலையில் சிக்கிய சுறாவை மீண்டும் கடலில் விட்ட மீனவர்கள்.. நயினா தீவு இலங்கை

வலையில் சிக்கிய சுறாவை மீண்டும் கடலில் விட்ட மீனவர்கள் வீரகேசரி :  இலங்கை நயினாதீவு கடற்பகுதியில் நேற்று சிக்கிய சுமார் 2,000 கிலோ எடைகொண்ட சுறா (Whale Shark) மீனை கரைக்கு இழுத்துவரப்பட்டு மீண்டும் கடலுக்குள் யாழ்ப்பாண மீனவர்கள் விடுவித்துள்ளனர்.
யாழ்.நயினாதீவு கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவரின் வலையிலேயே இந்த சுறா மீன் சிக்கியுள்ளது.
குறிப்பிட்ட பகுதியில் மீன்டிபியில் ஈடுபட்டிருந்த வேளை வழமைக்கு மாறாக அதிக எடை கொண்ட மீன் சிக்கியிருப்பதை அவதானித்துள்ளார். இது தொடர்பில் சக மீனவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். 11 வலையில் சிக்கிய சுறாவை மீண்டும் கடலில் விட்ட மீனவர்கள் வலையில் சிக்கிய சுறாவை மீண்டும் கடலில் விட்ட மீனவர்கள் 11ஏனைய சில மீனவர்கள் அங்கு வந்த போதும், வலையில் சிக்கிய மீனை படகில் ஏற்ற முடியாததால் மீனை கரைக்கு இழுத்து வந்தனர்.

மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் மீன் கரைக்கு இழுத்துவரப்பட்ட போது, சுறா இனத்தை சேர்ந்த மீனினம் என தெரியவந்துள்ளது. அருகிவரும் மிகவும் பெறுமதி வாய்ந்த உயிரினம் என்பதாலும் மீனை உணவுக்காக பயன்படுத்த முடியாது என்பதால் மீண்டும் அதை கடலிலேயே விட்டுவிட்டதாக மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: