சனி, 28 செப்டம்பர், 2019

உபி ..மருத்துவர் கபீல் கான் மீதான யோகி அரசின் பொய்குற்ற சாட்டுகளில் இருந்து விடுதலை

Prakash JP‎ : உங்களுக்கு இந்த கொடுமை மறந்திருக்காது..
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மருத்துவ மனையில் 2017ஆம் ஆண்டு ஆக்சிசன் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக 60 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர். ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை செய்யும் கம்பெனிக்கு பல ஆண்டுகளாக அம் மாநில அரசாங்கம் பணம் கொடுக்காததால் திடீரென்ற சப்ளையை நிறுத்தியது..
தங்கள் மீதான தவறை மறைக்க, ஆக்சிஜன் சப்ளை கம்பெனிகளுக்கு பணம் தர வக்கற்ற அம்மாநில பிஜேபி அரசாங்கம், அந்த மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர் கபீல் கான் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி பிரச்சினையை திசைத் திருப்பியது. அவர் கைது செய்யப்பட்டு 9 மாதங்கள் பிணை இன்றி சிறையில் இருந்தார்.
தான் நடத்தும் தனியார் மருத்துவமனைக்கு சிலிண்டர் கடத்தி விட்டார், டெண்டர் எடுத்ததில் ஊழல் செய்து விட்டார், சிலிண்டர் கம்பனிக்கு தரவிருந்த தொகையை திருடி விட்டார் என்று எண்ணற்ற புகார்கள் அள்ளி வீசப்பட்டது. இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் வாய் பொத்தி வேடிக்கை பார்த்தது.

இன்று, மருத்துவர் கபீல் கான் எந்த தவரும் செய்யவில்லை என்றும், தன் கை காசை செலவு செய்து முடிந்தவரை சிலிண்டர் வாங்கியதாகவும் போலிஸ் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இத்தனை நாள்கள் பொய்யான குற்றச்சாட்டை சுமந்துகொண்டு சிறையில் பல மாதங்கள் கழித்த இந்த மருத்துவருக்கு அரசாங்கம் என்ன பதில் சொல்லும்?? என்ன இழப்பீடு தரப்போகிறது??
இதுபோன்றே பிஜேபி யோகி அரசாங்கத்தை விமர்சிக்கும் பத்திரிக்கையாளர்கள் மீது எல்லாம் பொய் வழக்குகளைப் போட்டு ஜெயிலில் அடைகிறது அம்மாநில அரசு..

கருத்துகள் இல்லை: