திங்கள், 19 ஆகஸ்ட், 2019

பறைவையை காப்பாற்றிய நாய் .. வைரல் வீடியோ


நாய்கள் ஒருபோதும் எவர் மீதும் புகார் செய்யாத அற்புதமான உயிரினங்கள், ஆனால் தேவைப்படும் ஒருவருக்கு எப்போதும் உதவி செய்யும்.
மேற்கூறிய கூற்றை சரியானதாக நிரூபித்து, சமீபத்தில் ஆபத்தில் சிக்கிய பறவையின் உயிரைக் காப்பாற்றிய கஸ் என்ற ஒரு வகையான நாயைச் சந்திப்போம்.
 மனிதாபிமானம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் கூட உண்டு என்பதை மீண்டும் உலகுக்கு நிரூபித்தது இந்த வழக்கு. இந்த வழக்கைப் பற்றி இப்போது விரிவாகக் காண்போம். கஸ் (லாப்ரடோர்-பைரனீஸ் கலப்பு இன நாய்) மற்றும் ஜெட் (பைரனீஸ் இனம்) இதமான வானிலையில் வெளியே விளையாட விரும்புவார்கள். அவர்கள் விளையாடும்போது, நாய்களின் உரிமையாளர் ஜெனிபர் திரையிடப்பட்ட தாழ்வாரத்தைத் திறந்து விடுவார், இதனால் இந்த விலங்குகள் அவை விரும்பும் போதெல்லாம் முற்றத்தில் உள்ளேயும் வெளியேயும் செல்ல முடியும். அறையின் தாழ்வாரம் கண்ணாடியால் ஆனது. இதனால் பல பறவைகளை அவற்றின் பிரதிபலிப்பால் அவை ஈர்க்கின்றன.
இதனால் பெரும்பாலும் பறவைகள் ஆர்வத்தினால் உள்ளே சென்று சிக்கிக் கொள்கின்றன “பல ஆண்டுகளாக, பல பறவைகள் எங்கள் தாழ்வாரத்தில் சிக்கிக் கொண்டன” என்று ஜெனிபர் அஹ்ல்பெர்க் (கஸின் உரிமையாளர்) கூறினார்.


கஸ் மற்றும் ஜெட் விளையாடும் ஒரு நாளில், கேமரா அவர்களின் அன்பான செயலைப் படம்பிடித்தது. கஸ் தாழ்வாரத்தின் அருகே அலைந்து கொண்டிருப்பதாகவும், அறையிலிருந்து வெளியேற முயன்றபோது ஒரு பறவை தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டிருப்பதைக் கண்டதாகவும் வீடியோ காட்டுகிறது.

 பறவை திடீரென்று கண்ணாடியில் மோதி கீழே விழுந்தது. மேலும் கஸைப் பார்த்தபின், அங்கிருந்து விரைந்து செல்ல முயற்சித்தது, ஆனால் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டது. உடனடியாக, கஸ் மென்மையாக அந்தப் பறவையை தன் பற்களுக்கு இடையில் பற்றி எடுத்துக்கொண்டு வெளியே சென்று விடுவித்தது,

பறவை நன்றியுணர்வோடு பறந்தது. கேமராவில் உள்ள காட்சியைப் பார்த்து, ஜெனிபர் தனது நாய்களைப் பற்றி பெருமிதம் கொள்ளக்கூடும், அவரின் நாய்களுக்கு ஒரு சிறிய உயிரினத்தின் மதிப்பு கூட தெரியும் அளவிற்கு உள்ளது ஒரு நெகிழ்ச்சியை உண்டாக்கும். “அதிர்ஷ்டவசமாக, கஸுக்கு என்ன செய்வது என்று தெரிந்திருந்தது.

பறவைக்கு காயம் ஏற்படாமல் அங்கிருந்து அதனை வெளியேற்ற அவனால் முடிந்தது. பின்னர் அவன் பறவையை வெளியே கொண்டு வந்து அதை விடுவிக்கிறான்” என்று அஹல்பெர்க் ஊடகங்களுக்கு கஸ் பற்றி தெரிவித்தார்  மாலைமலர்

கருத்துகள் இல்லை: