வியாழன், 22 ஆகஸ்ட், 2019

பார்ப்பனர்களின் பொற்காலம்! அரசியல் சட்டம் புனிதம்! நீதித்துறை புனிதம்! கோயில்கள் புனிதம் ..அதாவது பார்ப்பனர்கள்தான் புனிதம்....

Kandasamy Mariyappan : பார்ப்பணர்களுக்கு மீண்டும் கிடைத்தது
//குப்த பேரரசு//:
1912 முதல் தமிழ்நாட்டு அரசியலை அறிந்த பலருக்கு, ஃபாசிசம் எவ்வளவு காலமாக, எத்தனை சூழ்ச்சிகளோடு வேலை பார்த்துள்ளது என்பது புரியும்.
1. 1954 வரையில் அரசியல், அரசாங்கம், நீதிமன்றம், ஊடகம் அனைத்தும் புனிதம்.
காரணம் முதலமைச்சர் முதல், எல்லா இடங்களிலும் பார்ப்பணர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்தது.
2. 1954 - 67 வரையில் அரசியல் சுமார். காரணம் திரு. காமராஜர் மூலம் பார்ப்பணீயத்துடன் பெரியாரியம் கலந்து விட்டது. RSS, திரு காமராஜரை கொல்லவும் துணிந்தது.
ஆனால் அரசாங்கம், நீதிமன்றம், ஊடகம் புனிதமாக இருந்தது.
காரணம் அவை முழுவதும் பார்ப்பணர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது.
3. 1969 - 90 வரையில் அரசியல் ஒரு ஊழல் நாற்றமடித்த சாக்கடை. காரணம் அண்ணா, கலைஞர் போன்ற சாமாணியர்கள் அதிகாரத்திற்கு வந்து விட்டனர். அரசாங்கம் சுமார். காரணம் பார்ப்பணர்கள் மற்றும் தங்களை பார்ப்பணர்களாக கருதிக் கொண்ட பிள்ளைகள், முதலியார்கள், செட்டியார்கள் போன்றவர்கள் அதிகாரிகளாக இருந்தாலும் சமூகநீதி கோட்பாட்டின் மூலம் பறையரும் புழையரும் படித்துவிட்டு அதிகாரிகளாக வந்து விட்டனர்.
நீதிமன்றம், ஊடகங்கள் புனிதம். காரணம் அங்கே தங்களை பார்ப்பணர்களாக கருதிக் கொண்ட பிள்ளைகள், முதலியார்கள், செட்டியார்களை உள்ளடக்கிய பார்ப்பணீயம் ஆட்சி செய்தது.
4. 1990 க்குப் பிறகு எல்லாமே கெட்டுவிட்டது. காரணம் சமூகநீதி எல்லோரையும் எல்லா இடங்களிலும் அனுமதித்து விட்டது.
எனவே எந்த காமராஜரை கொல்லத் திட்டம் தீட்டினார்களோ அந்த காமராஜரை, திராவிட கட்சிகளுக்கு, குறிப்பாக கலைஞருக்கு, எதிராக உயர்த்தி பிடித்தது பார்ப்பணீயம். காரணம் கலைஞரை ஊழல் குற்றவாளியாகவும், ஒழுக்கமற்றவராகவும் மக்கள் மனதில் பதியவைக்க வேண்டும். என்பதற்காக.

5. 90களில் திரு ப சிதம்பரம் அவர்கள், காங்கிரஸ் ஆண்டுகொண்டிருந்த பக்கத்து மாநிலங்கள் வளர்ச்சியடையவில்லை என்ற உண்மையை அறிந்தும், தமிழ்நாட்டை இன்னும் 20 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்திருந்தால், தமிழ்நாடு மிகப்பெரிய அளவில் வளர்ந்திருக்கும் என்றார்.
அப்பொழுது பார்ப்பணீயத்திற்கு திரு.ப.சிதம்பரம் மிகச்சிறந்த அறிவாளியாகவும், ஆளுமையாகவும், நேர்மையானவராகவும் தெரிந்தார்.
காரணம் திராவிட கட்சிகள் மீது மக்களுக்கு வெறுப்பு வர வேண்டும் என்பதற்காக.
ஆனால் அதே ப சிதம்பரம் 2000க்குப் பிறகு பார்ப்பணீயத்தின் முன் ஒரு கொள்ளைக்காரனாக மாறிவிட்டார்.
6.கலைஞரை விட ஆளுமைத்திறன் அதிகம் உள்ளவர்கள் என்று திரு எம் ஜி ராமச்சந்திரன், செல்வி ஜெயலலிதா போன்றவர்களை எப்பொழுதுமே உயர்த்தி பிடித்தது பார்ப்பணீயம்.
காரணம் கலைஞரின் செயல்கள் சாமாணியர்கள் மனதிற்கு சென்று விடக்கூடாது என்பதற்காக.
7. ஒன்றிய அரசியலில் தூய்மையாகவும், ஆளுமையாகவும், நேர்மையாகவும் தெரிந்த காங்கிரஸ் கட்சி 2000க்கு பிறகு ஊழல் கட்சியாக மாறியது எப்படி!!
காரணம் RSS/பார்ப்பணீயத்தின் நேரடி அரசியல் கட்சியான பாஜக, ஆட்சியை பிடிக்க முடியும் என்ற சூழல் உருவாகிவிட்டது. எனவே எந்த காங்கிரஸ் கட்சியின் மீது இவ்வளவு வருடங்களாக சவாரி செய்து ஆட்சி செய்ததோ, அந்த காங்கிரஸ் கட்சியே இனி பார்ப்பணீயத்திற்கு தேவையில்லை.
8. குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜி என்ற பார்ப்பணருக்கு எதிராக களமிறங்கிய செல்வி ஜெயலலிதா அய்யங்கார் இறந்த பொழுது, விமானம் பழுது ஏற்பட்ட பொழுதும் டெல்லி சென்று மீண்டும் சென்னை வந்தார் குடியரசுத்தலைவர் பிரணாப்.
ஆனால் பிரணாப் என்ற பார்ப்பணரை குடியரசுத்தலைவராக முன்மொழிந்து, ஆதரவளித்த கலைஞரின் இறப்பிற்கு, முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் கலந்து கொள்ள முடியவில்லை.
காரணம் கலைஞருக்கு முக்கியத்துவம் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக.
9. செல்வி ஜெயலலிதாவின் உடல் புதைக்கப்படும் வரையில் அருகில் இருந்த பிரதம அமைச்சர் திரு நரேந்திர தாமோதரதாஸ், கலைஞர் இறந்தபொழுது தனது தலையை மட்டுமே காட்டியதுடன் காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு ராகுல் அவர்களுக்கு பாதுகாப்பு குறைபாட்டையும் ஏற்படுத்தினர், ஏன்?!
கலைஞருக்கு முக்கியத்துவம் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக.
10. இதோ தனது கடைசி அஸ்த்திரமாக, எந்த காங்கிரஸ் கட்சியை பார்ப்பணீயத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்தியதோ, அந்த காங்கிரஸ் கட்சியில் இருந்த அனைத்து RSS உறுப்பினர்களையும் தங்களது பக்கம் இழுத்ததோடு, கடைசியில் ப சிதம்பரம் போன்ற ஆளுமைகளை சிறையில் அடைத்து, அவமானப்படுத்தி, தனிமைப்படுத்தி
திரு நரேந்திர/திரு. அமித் கூட்டணி என்ற குப்த பேரரசை மீண்டும் நிறுவியது பார்ப்பணீயம்.
இனிமேல் ஒரே
நாடு,
மொழி,
இனம்,
கலாச்சாரம்,
உணவு
என்று ஓங்கி ஒலிக்கும்.
பாரத் மாதா கீ ஜே
ஜெய் ஸ்ரீராம்
என்று ஓங்கி ஒலிக்கும்.
முஸ்லிம் ஹே, பாகிஸ்தான் ஹே என்ற மத துவேஷம் அதிகரிக்கும்.
குப்த பேரரசுகளும், பாண்டிய, சோழ பேரரசுகளும் நிரந்தரம் இல்லை.
மீண்டும் பெரியார் வருவார்
மீண்டும் அண்ணா வருவார்
மீண்டும் கலைஞர் வருவார்.

கருத்துகள் இல்லை: