புதன், 21 ஆகஸ்ட், 2019

அணு ஆயுத கொள்கையில் தேவையில்லாமல் உலக நாடுகளை பகைத்து கொள்கிறாதா இந்தியா .

ஸ்பெல்கோ : ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தற்போது சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டிஷ், அமெரிக்கா ஆகிய நாடுகள் இருக்கிறது. இந்த நிலையில்தான் இந்தியா தனது அணு ஆயுத கொள்கையை மாற்ற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. நாட்டின் அணு ஆயுத கொள்கை மாறலாம். அணு ஆயுத பயன்பாடு இல்லை என்பதுதான் இப்போது கொள்கை. எதிர்காலத்தில் அது மாற வாய்ப்பு இருக்கிறது, என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
;அணு ஆயுதத்தை பயன்படுத்தும் கொள்கையை மாற்றிக்கொள்ள தயார் என்று இந்தியா கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது இந்தியாவிற்கு எதிராகவே திரும்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
காஷ்மீர் பிரச்சனை நிமிடத்திற்கு நிமிடம் பெரிதாகிக் கொண்டே செல்கிறது. காஷ்மீரில் நடக்கும் பிரச்சனை குறித்து ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில் இந்தியாவின் நட்பு நாடான ரஷ்யா கூட நடுநிலையை எடுத்தது அமெரிக்க பாகிஸ்தான் சீனா நாடுகளின் நிலைக்கு ஆதரவகவே கருதப்படுகிறது >காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் செயல் சரியா தவறா என்று முடிவெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இந்தியாவின் அணு ஆயுத கொள்கை இந்த அறிவிப்பை சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது.

COK 1,2 என்பது சீனா ஆக்கிரமித்த காஸ்மீரி பகுதி , POK ன்பது பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஸ்மீரி பகுதி
;இந்தியா அணு ஆயுதத்தை பயன்படுத்த தயங்காது என்று சீனா எச்சரிக்கை விடுக்கும் பட்சத்தில் அது இந்தியாவிற்கு எதிராக திரும்பும் என்பது குறிப்பிடத்தக்கது. 
சமீபத்தில் இந்தியாவின் வரிக் கொள்கையை அமெரிக்கா தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இந்தியாவுக்கு முன்னுரிமை வணித்தை அமெரிக்கா மோடி இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்தவுடன் விலக்கி கொண்டது குறிப்பிடதக்கது 
 
;தற்போது இந்தியாவே தானாக வந்து அணு ஆயுதம் பற்றி பேசியுள்ளது. அமெரிக்கா, சீனா இரண்டு நாடுகளும் இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும்.
 
அணு ஆயுதங்களை வைத்து மிரட்டிக் கொண்டு இருந்த வடகொரியா மீது அமெரிக்கா மிக மோசமாக வரிகளை விதித்தது. அதேபோல் பொருளாதார தடையை விதித்தது>பாஜக அரசு தேவையில்லாமல் அணு ஆயுதம் குறித்து பேசி இந்தியாவை பெரிய சிக்கலில் மாட்டி இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவ்த்த வண்ணம் உள்ளார்கள்

கருத்துகள் இல்லை: