செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

காஷ்மீர் மக்களுக்காக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் என்ன பயனை தரும்?

காஷ்மீரில் முன்னாள் முதல்வர்கள் உட்பட ஏராளமான தலைவர்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ள நிலையில் ,
அங்கு என்ன நடக்கறது என்பதே தெரியாமல் மர்மமான ஒரு ராணுவ அடக்குமுறை ஆட்சி நடகிறது .
காஷ்மீர் மக்களும் இந்திய மக்கள்தான் என்ற ஒரு சிறு நம்பிக்கையை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் அந்த மக்களின் மனதில் விதைக்க இந்த ஆர்ப்பாட்டம் பேருதவி செய்யும் ..
இவர்களின் டெல்லி ஆர்ப்பாட்டம் நிச்சயம் சர்வதேசத்தின் கவனத்தை பெறும்...
Ramasamy Jayaprakash வடஇந்தியாவில் உள்ள மக்களுக்கு அதீத பாகிஸ்தான் எதிர்ப்பு நிலைப்பாடு உள்ளது.
இந்த விஷயத்தை உணர்வு பூர்வமாக அணுகும் வடஇந்தியர்களிடம் கெட்ட பெயர் எடுக்க கூடாது என்று எதிர்க்கட்சிகள் கூட பாஜக அரசு தாக்கல் செய்த இந்த மசோதாவை எதிர்க்க முடியாமல் குழம்பியது.
ஆனாலும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளான மதிமுக, விசிக போன்ற கட்சிகளும் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்தது.

ராஜ்யசபாவை வைகோ தனது பேச்சால் அசைத்து பார்த்தார். டி.ஆர் பாலுவோ நேரடியாக அமித் ஷாவிடம் கேள்வி கேட்டு பாஜகவினரை திரும்பி பார்க்க வைத்தார்.
 தயாநிதி மாறன் பேச்சு.. அவரின் வாழ்நாளில் முக்கியமானது.
காஷ்மீர் விவகாரத்தில் இப்படி களத்தில் இறங்கி எதிர்கட்சிகளை இணைத்து போராட்டத்தில் குதிக்கும் ஒரே கட்சியாக திமுக உருவெடுத்து உள்ளது.
அதிலும் காஷ்மீர் விவகாரத்தில் யார் இது பாஸ் இவங்க, இப்படி எதிர்க்கிறாங்க என்று மொத்த வடமாநிலங்களும் திமுகவை திரும்பி பார்த்து இருக்கிறார்கள்.. அவர்களுக்கு இந்த எதிர்க்குரல் கண்டிப்பாக புதிதாக இருக்கும்

கருத்துகள் இல்லை: