nakkheeran.in - sundarapandiyan :
புதுச்சேரி
மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது என சென்னை
உயர்நீதிமன்ற வழங்கிய தீர்ப்புக்கு எதிராக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி
மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில்
மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த மேல்முறையீட்டு மனுவை இன்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
> இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த முதலமைச்சர் நாராயணசாமி, “ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு புதுச்சேரி மக்களுக்கு கிடைத்த வெற்றி. ஜனநாயகம் வென்றுள்ளது. உச்சநீதிமன்றத்திற்கு நன்றி” என்றார். இதனிடையே தீர்ப்பு வந்தவுடன் முதலமைச்சர் நாராயணசாமி காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும் சட்டப்பேரவை வளாகத்தில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக