தினமணி: திருவனந்தபுரம்: புகழ்பெற்ற பாலிவுட் நடிகை ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல, கொலை என்று கேரள டிஜிபி ரிஷிராஜ் சிங் கூறியுள்ளார்.
முன்னாள் தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணர்
மறைந்த டாக்டர் உமாநாத் கூறிய விஷயங்களை மேற்கோள் காட்டியிருக்கும்
டிஜிபி, ஸ்ரீதேவியின் மரணம் கொலையாக இருக்கலாம் என்று எனது நண்பர் என்னிடம்
கூறியிருந்தார் என்றும் அவர் தெரிவிக்கிறார்.
ஸ்ரீதேவியின் மரணம் குறித்து அறிந்து
கொள்ள அவரிடம் நான் கேட்டபோது, ஸ்ரீதேவியின் மரணம் குறித்து நடத்தப்பட்ட
விசாரணையில் கிடைத்த பல ஆதாரங்களும் தடயங்களும் அவரது மரணம் ஒரு விபத்து
அல்ல என்பதை தெரிவிப்பதாகக் கூறினார்.
கேரளாவில் பல்வேறு வழக்குகளில் டாக்டர்
உமாநாத்தின் தடயவியல் நிபுணத்துவம் காரணமாக குற்றவாளிகள்
கண்டுபிடிக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து டாக்டர் உமாநாத் கூறியது என்னவென்றால், நடிகை ஸ்ரீதேவி அதிகமாகக் குடித்துவிட்டு குளியலறையில் மூழ்கியதாகத்தான் கூறப்படுகிறது. அப்படியே அவர் அதிகமாகக் குடித்திருந்தாலும், வெறும் ஒரு அடி உயரமே இருக்கும் தண்ணீரில் மூழ்கியிருக்க முடியாது. வேறு ஒருவர் அவரது தலையை தண்ணீரில் பிடித்து அழுத்தினால் தவிர, ஒரு அடி தண்ணீரில் நிச்சயம் நடிகை மூழ்கி உயிரிழந்திரக்க முடியாது என்று தெரிவித்ததாக டிஜிபி கூறியுள்ளார்.
தேவையான ஆதாரங்கள் கிடைக்காததால் ஸ்ரீதேவியின் மரணம் மர்ம மரணமாகவே முடிந்துவிட்டது என்று கூறியுள்ளார் டிஜிபி.< உடல்நலக் குறைவால் கடந்த வாரம் உயிரிழந்த டாக்டர் உமாநாத், கேரள காவல்துறையின் மருத்துவ ஆலோசகராகவும், தடயவியல் மருத்துவ பேராசிரியராகவும் விளங்கியது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக