ஞாயிறு, 7 ஜூலை, 2019

எம்ஜியார் நிஜவாழ்க்கையில் ஒரு ரவுடியா ? இயக்குனர் எஸ் சி சந்திரசேகர் பேட்டி வீடியோ


Ganesh Babu : புகழ்பெற்ற இயக்குனரும், நடிகர் விஜய் அவர்களின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் நேர்காணல் ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதன் ஒரு பகுதி முழுவதும் தலைவர் கலைஞரின் புகழைப் பற்றியும், பண்புகளைப் பற்றியும்தான் மெய்சிலிர்க்கப் பேசியுள்ளார்.
(2011 தேர்தல் எல்லாம் கண்முன் வந்துப்போகாமல் இல்லை)
"கலைஞரின் எழுத்தைப் பார்த்துதான் சினிமாவுக்கு வந்தேன்" என்று சொல்கிறார். பிறகு தலைவரின் வசனத்தில் ஒரு படத்தை எடுக்க நினைத்து அதற்கு 'இது நியாயம்தானா?' என்று தலைவர் சொன்ன தலைப்பையே படத்திற்கு வைத்திருக்கிறார். அந்த சமயத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியில் கலைஞர் கைது செய்யப்படவே, தலைவரின் மீதுள்ள அளவுக்கடந்தப் பற்றால் படத்தின் தலைப்பை 'நீதிக்கு தண்டனை' என்று மாற்றியிருக்கிறார். அந்தப் படத்திற்கு தலைவர் கலைஞர் சிறையில் இருந்தப்படியே வசனம் எழுதினாராம்.
பேட்டியின்போது எம்.ஜி.ராமச்சந்திரனின் நிஜ முகத்தை தோலுரித்துக்காட்டும் விதத்தில் சில செய்திகளை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்.
1. 'நாளை நமதே' படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் துணை இயக்குனராகப் பணிப்புரிந்தப்போது ஒரு பாடல் காட்சியில் எம்.ஜி.ராமச்சந்திரனின் 'lip-sync' சரியாக இல்லாததால் மிக இயல்பாக இன்னொரு முறை நடிக்கச் சொன்ன ஒரே காரணத்திற்காக மறுநாள் படத்திலிருந்து தான் நீக்கப்பட்ட செய்தியை வருத்தத்தோடு பகிர்ந்துக்கொண்டார்.

2. 'நீதிக்கு தண்டனை' படம் வெளியானப் பிறகு சட்டமன்றத்தில் அதை திரையிடக்கூடாது என்று எம்.ஜி.ராமச்சந்திரனின் அரசு தீர்மானம் இயற்ற, பிறகு கலைஞர்தான் நீதிமன்றம் மூலம் படத்தின் மீதான தடையை நீக்கியுள்ளார். ஆனால் செய்தி அதுவல்ல. இது நடந்த சில நாட்களுக்குப் பிறகு எஸ்.ஏ.சந்திரசேகரை எம்.ஜி.ராமச்சந்திரன் தன்னைப் பார்க்க வருமாறு அழைத்துள்ளார். 'அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர் கூப்பிட்டா என்ன செய்வார்னு எல்லாருக்கும் தெரியும். அதனால கண்டிப்பா என்னை உள்ள கூப்பிட்டு அடிக்கப்போறாருனு உறுதியா நம்பினேன். அதுனாலதான் கூடவே ஒரு போட்டோகிராப்பரையும் அழைச்சிட்டுப் போனேன். ஆனா நல்ல வேளை அப்படி எதுவும் நடக்கலை' என்று விவரிக்கிறார்.
இப்போது எனக்கு எழும் கேள்வியெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.
இந்த சல்லித்தனமான ரவுடிக்கு 'பொன்மனச் செம்மல்' என்று சில்லறையை சிதறவிடுபவர்களா, எங்கள் பேரருளாளன் கலைஞரின் தி.மு.கவை ரவுடிக்கட்சி என்கிறார்கள்?
-Ganesh Babu

கருத்துகள் இல்லை: