மின்னம்பலம் :மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. ஃபேஸ்புக் லொக்கேஷன் டெல்லி காட்டியது. தயாராக இருந்த ஸ்டேட்டஸ் போஸ்ட் ஆனது.
"பிஜேபி ஆட்சி அமைந்த பிறகு சந்திக்கப்போகும் முதல் தேர்தல் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கானது. அதனால் வேலூர் தேர்தலை கௌரவ பிரச்சினையாக பார்க்கிறது பிஜேபி. அதனால் வேலூரை கைப்பற்றியே ஆக வேண்டும் என்பதில் தீவிரமாகி இருக்கிறது. வேலூர் தேர்தல் தேதி அறிவித்ததுமே பிஜேபியில் உள்ள கரு.நாகராஜன், பி.டி.அரசகுமார் உள்ளிட்ட ஒரு டீம் தொகுதிக்குப் போனது. தொகுதி முழுக்க சுற்றி வந்து ஒரு ரிப்போர்ட்டை டெல்லிக்கு அனுப்பியிருக்கிறது. மத்திய உளவுத் துறை மூலமாகவும் வேலூர் தொகுதி பற்றிய ரிப்போர்ட் வாங்கி இருக்கிறார்கள். எல்லாம் கைக்கு வந்ததும், எடப்பாடியை தொடர்பு கொண்டு டெல்லியில் இருந்து பேசி இருக்கிறார்கள்.
'40 தொகுதியில் ஒரு தொகுதி தான் ஜெயிச்சோம் என்பது நமக்கு பெரிய அசிங்கம்.இப்போ மறுபடியும் ஒரு வாய்ப்பு வருது. ஒரே தொகுதிதான். அதுல முழுசாக வேலை பார்த்து ஜெயிக்கலைன்னா தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியும், மத்தியில் பிஜேபியும் ஆட்சியில் இருப்பது வேஸ்ட். அதெல்லாம் பார்த்துக்கலாம் என இனியும் சொல்லாதீங்க. நாங்க போட்டுக்கொடுக்கும் ப்ளான்படி வேலை பாருங்க அதுவே போதும்.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் குறைஞ்சது இரண்டு அமைச்சர்களை இருக்க சொல்லுங்க. நேரடியாக இப்போ எதுவும் செய்ய முடியாது. ஆனால் என்னவெல்லாம் செய்து கொடுக்கப் போறோம் என்பதை அவங்களை வீடு வீடாக போய்ப் பேச சொல்லுங்க. பணத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம். வேட்பாளர்கிட்ட பேசிட்டோம். செலவுகள் அத்தனையும் அவரே பார்க்கிறேன்னு சொல்லிட்டாரு.
அதையும் தாண்டி என்ன வேணுமோ கேளுங்க. நாங்க கொடுக்கிறோம். ஆனால் கொடுக்கிறது சரியாக மக்களிடம் போய் சேரணும். அதுக்கு அதிமுக தான் பொறுப்பு ஏற்கணும். நாம கொடுக்கிறது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் எதிரணி கொடுப்பதை தடுக்கணும். அதுக்கு தனி டீம் போடுங்க. திரும்ப தேர்தலே நின்றாலும் பரவாயில்லை. அவங்க பணம் கொடுப்பதை பகிரங்கப்படுத்தணும். நம்ம ப்ளஸ் பத்தி அதிகம் பேசுவதை விட அவங்க மைனஸ் என்ன என்பதை எடுத்து சொல்லுங்க. குறிப்பாக பிரச்சாரத்தில் அமைச்சர்கள் யாரும் உளறாமல் இருக்க சொல்லுங்க. என்ன பேசப் போறோம் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு பேசச் சொல்லுங்க.
வேலூர் தொகுதியில் எந்த ஊருக்கு என்ன உடனடி தேவை என்ற லிஸ்ட் எங்க கையில் இருக்கு. அதை உங்களுக்கு அனுப்புறோம். அந்த ஊர்களுக்கு ஆட்களை அனுப்பி கவனிங்க.
இது துரைமுருகன் பையனுக்கும், ஏ.சி.சண்முகத்துக்கும் இடையில் நடக்கும் போட்டி இல்லை. இது பிஜேபிக்கும் திமுகவுக்கும் இடையே நடக்கும் தேர்தல். அதை மனசுல வெச்சு வேலை பாருங்க..." என்று சொல்லி இருக்கிறார்கள்.
அதன் பிறகு ஏ.சி.சண்முகமும், முதல்வரிடம் இதே தகவல்களை சொல்லி இருக்கிறார். 'டெல்லியில் இருந்து சொன்னாங்க..' என்று சொன்னாராம் எடப்பாடி. அமைச்சர்கள் தங்கமணி வேலுமணி இருவரையும் அழைத்து எந்த பொறுப்பை யாருக்கு கொடுக்கலாம் என்று ஆலோசனையும் நடத்திய முதல்வர், அதற்கு ஒரு பட்டியலை தயார் செய்யவும் சொல்லி இருக்கிறாராம்.
பிரதமர் அத்திவரதர் தரிசனத்துக்கு வரும் அதே நாளில் முதல்வர், அமைச்சர்கள் என அத்தனை பேரும் காஞ்சிபுரத்தில் இருப்பார்கள். அங்கே வேலூர் தேர்தல் தொடர்பான அப்டேட்களை பிரதமரிடம் கொடுக்கப் போகிறாராம் முதல்வர்.
அதற்காகவே அமைச்சர்களை முடுக்கி விட்டிருக்கிறார் முதல்வர். " என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ்.
அதற்கு லைக் போட்டுவிட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக