தினமலர் :காட்மாண்டு: நேபாளத்தில் திபெத் தலைவர் தலாய்லாமாவின் பிறந்தநாள் கொண்டாட அந்நாடுஅரசு தடை விதித்துள்ளது.
இந்தியாவின் இமாசலபிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலாவில் வசித்து வருபவர் தலாய்லாமா. 14-வது தலாய்லாமாவான இவர் கடந்த 1959 ல் சீன ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியை அடுத்து இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவருடைய பிறந்த நாள் ஜூலை 6 ஆகும். கடந்த 1935-ல் பிறந்த அவருக்கு தற்போது 84 வயது நடைபெறுகிறது.< இந்நிலையில் நேபாளத்தில் வசித்து வரும் திபெத்தியர்கள் தங்களது தலைவரின் பிறந்த நாளை ஸ்வயம்பூநாத் பகுதியில் உள்ள முஸ்டங்கும்பா என்ற இடத்தில் பல நிகழ்ச்சிகளை கொண்டாட முடிவு செய்தனர். ஆனால் பிறந்த நாளை கொண்டாட தடை விதித்த நேபாள அரசு அப்பகுதிக்கு பாதுகாப்பு படையை அனுப்பி வைத்தது.
விழாவில் அமெரிக்கா ஜெர்மனி, மற்றும் இங்கிலாந்துநாட்டுதூதுவர்கள் கலந்து கொள்ள இருந்தனர். விழாவை ரத்து செய்தது குறித்து கருத்து தெரிவித்த வெளிநாட்டுதூதர் ஒருவர் கூறுகையில் இது திபெத்திய சமூக மக்களின் உரிமைகளை கடுமையாக மீறுவதாகும் என கூறி உள்ளார்.
இது குறித்து நேபாள நாட்டின் உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ராம்கிருஷ்ணா ரெக்மி கூறுகையில் திபெத்தியர்கள் தங்கள் வீடுகளில் தலாய்லாமாவின் பிறந்த நாளை தனிப்பட்ட முறையில் கொண்டாடலாம். ஓட்டல்கள் உள்ளிட்ட பொது இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்த மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. என கூறினார்.
திபெத் ஆக்ரமிப்பில் ஈடுபட்டுள்ள சீனா, தற்போது நேபாளத்திற்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது . அதற்கு பிரதிபலனாக சீனாவின் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக