தினமலர் : தி.மு.க., - -பா.ஜ., தொடர்பான இன்னொரு விஷயமும், விரைவில் நடக்கவிருக்கிறது. புதுச்சேரி கவர்னர், கிரண் பேடி, தமிழக அரசியல்வாதிகள் பற்றி, 'டுவிட்' செய்த விஷயம், பெரும் சர்ச்சையை கிளப்பியது.தி.மு.க., --- எம்.பி.,க்கள், இந்த விவகாரத்தை லோக்சபாவில் எழுப்பினர். இதையடுத்து, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், கிரண் பேடியிடம் பேச, அவரும் அந்த டுவிட்டை நீக்கிவிட்டு வருத்தம் தெரிவித்தார்.
இதில், தி.மு.க., - எம்.பி.,க்கள், திருப்தி அடையாத நிலையில், கிரண் பேடியை, வேறு மாநிலத்திற்கு கவர்னராக நியமிக்க ஆலோசனை நடக்கிறதாம். மம்தா பானர்ஜி, முதல்வராக இருக்கும் மேற்கு வங்கத்தில், இப்போதைய கவர்னர், கேசரிநாத் திரிபாதியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. அந்த இடத்திற்கு, கிரண் பேடி நியமிக்கப்படலாம் என, சொல்லப்படுகிறது. மம்தா பானர்ஜிக்கு, சரியான ஜோடி, கிரண் பேடி என்கின்றனர், பா.ஜ., தலைவர்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக