தினத்தந்தி : டெல்லி மேல்சபை தேர்தல்: வைகோ-அன்புமணி உள்பட 6 பேரும் போட்டியின்றி தேர்வு
சென்னை: பாராளுமன்ற மேல் சபையில் தமிழக எம்.பி.க் கள் 6 பேர் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிதாக 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய வருகிற 18-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
6 பாராளுமன்ற மேல்- சபை எம்.பி.க்களை தமிழக சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்ய வேண்டும். எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிட்டால் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் 3 எம்.பி.க்களையும் தி.மு.க. கூட்டணி சார்பில் 3 எம்.பி.க்களையும் தேர்வு செய்ய முடியும்.
அ.தி.மு.க. வேட்பாளராக சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச் செயலாளரான வேலூரை சேர்ந்த முகமது ஜான், மேட்டூர் நகரச் செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அ.தி.மு.க. தோழமை கட்சியான பா.ம.க. சார்பில் அன்புமணி ராமதாஸ் பேட்டியிடுகிறார். இவர்கள் 3 பேரும் நாளை மனுத்தாக்கல் செய்கின்றனர். தி.மு.க. வேட்பாளர்களாக தொ.மு.ச. பொதுச் செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோரும் கூட்டணி கட்சியான ம.தி.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் வைகோவும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்று மனு தாக்கல் செய்துள்ளனர். மனுக்கள் பரிசீலனை 9-ந்தேதி நடைபெறுகிறது. மனுக்களை திரும்ப பெற 11-ந்தேதி கடைசி நாளாகும். தற்போதைய நிலவரப்படி வைகோ, அன்புமணி ராமதாஸ் உள்பட அ.தி.மு.க. - தி.மு.க. வேட்பாளர் 6 பேரும் போட்டியின்றி எம்.பி.க்களாக தேர்வு செய்யப்படுகின்றனர். சுயேட்சைகளின் மனுக்கள் 9-ந்தேதி தள்ளுபடி செய்யப்பட்டுவிடும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக