வெள்ளி, 14 ஜூன், 2019

கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் மகனுடன் பெற்றோர் தற்கொலை

tamil.oneindia.com C jeyalakshmi : நாகப்பட்டிணம்: படித்து போலீஸ் ஆக நினைத்த சிறுவனின் கனவு கல்விக்கட்டணம் கட்ட முடியாமல் சிதைந்து போனது.
மகனின் ஆசையை நிறைவேற்ற முடியலையே என்ற வேதனையில் நகை தொழிலாளி ஒருவர் குடும்பத்தோடு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அரசு பள்ளிகளில் இலவமாக கல்வி கற்பிக்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுகள் அளிக்கப்படுகின்றன. அரசு வேலைக்கு ஆசைப்படும் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைப்பதில்லை. அதிக பணம் கட்டி தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். தனியார் பள்ளிகளில் கட்டணக்கொள்ளையால் பல பெற்றோர்கள் கடன் வாங்குகின்றனர்.
அம்மாக்கள் நகைகளை அடகு வைக்கின்றனர். அப்பாக்கள் தகுதிக்கு மீறி கடன் வாங்குகின்றனர். அதுவும் கேட்ட இடத்தில் கடன் கிடைக்காவிட்டால் உலகமே வெறுத்து போகிறது. கடைசியில் பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்ற முடியலையே என்ற வேதனையில் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொள்கின்றனர்.

Satheesh kumar : தனியார் பள்ளிக்கு பீஸ் கட்ட முடியாமல் மகனுடன் பெற்றோர் தற்கொலை...
ஏறக்குறைய இதுபோன்ற தற்கொலைகள் இனி சர்வசாதாரணமாக நடக்கலாம்...
பள்ளிகளில் தாளாளர்கள் பள்ளிக்கட்டணம் கட்டினால் தான் பிள்ளைகளை வகுப்பிற்குள் விடுவோம் என்று வெளியில் நிறுத்திவிடுகிறார்கள்...
பிறகு அவமானத்தை அறுவடை செய்யவேண்டிய சூழல்....
தன் மகனுக்கு பதில் கூற இயலாத நிலை....
நாம் தான் அறிவற்று ஆங்கிலப்பள்ளிகளில் பிள்ளைகளை சேர்த்துவிட்டு தள்ளாடிக்கொண்டிருக்கிறோம்....
என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்....
அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்த்து தாய்மொழி வழிக்கல்விமுறையைப் பின்பற்றுங்கள்.....
ஏறக்குறைய உழைப்பின் பெரும்பகுதியை மெட்ரிக் மற்றும் CBSC சிலபஸ் முறை என்று கல்விக்கட்டணத்திற்கே வீணாக்கி விடாதீர்கள்.....

கருத்துகள் இல்லை: