சனி, 15 ஜூன், 2019

ஜெயமோகனை பின்னி எடுத்ததன் பின்னணி!! மனைவியை தாக்கியதால் கணவன் கோபம் ...

Vini Sharpana : வியாபாரிகள் பெரும்பாலான நேரங்களில் கஸ்டமர்களிடம் கனிவோடுதான் நடந்துகொள்கிறார்கள். ஆனால், கோபப்பட்டு தாக்குமளவுக்கு போகிறார்கள் என்றால் பிரபலம் செய்த பிராப்ளம் என்ன என்று சம்பந்தப்பட்டவர்களிடமே விசாரித்தேன்.
நாகர்கோயில் நேசமணி நகரிலுள்ள( ஒலக லெவல் நேசமணி அல்ல) மாவுக்கடையில் வழக்கம்போல் தோசைமாவு கேட்டிருக்கிறார் ஜெயமோகன். புதியமாவு தயாராகவில்லை. பழையமாவுதான் இருக்கிறது. கொஞ்சம் புளிப்பாக இருக்கும் என்று சொல்லித்தான் கொடுத்திருக்கிறார் மாவுக்கடை பெண்மணி. வாங்கிச் சென்றவருக்கு வீட்டில் என்ன டோஸ் விழுந்திருக்குமோ... கோபம் கொப்பளிக்க வந்தவர் திருப்பிக்கொடுத்துவிட்டு காசைக் கேட்டிருந்தால் பிரச்சனை முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கும்.
ஆனால், மாவுப்பாக்கெட்டை பெண்மணியிடம் தூக்கி வீசிவிட்டு அசிங்கமாகவும் தகாத வார்த்தைகளையும் பயன்படுத்தியதோடு அத்துமீறியிருக்கிறார். தன் கண்முன்னே தன் மனைவியின் மீது கை வைத்தால் எந்தக் கணவனால்தான் பொறுத்துக்கொள்ள முடியும்?

கோபத்தில் தாக்கியிருக்கிறார் கணவர். பிரபலமானவராக இருந்தாலும் யாராக இருந்தாலும் பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்டால் இதுபோன்ற எதிர்வினையை எதிர்கொண்டுதானே ஆகவேண்டும்? அதுவும், எப்போதுமே பெண்களை இழிவுபடுத்தும் ஜெமோவுக்கு இது தேவைதான். சி.சி.டி.வி. கேமரா ஃபுட்டேஜ் வந்தால் ஜெமோ முகத்திரை இன்னும் கிழிந்து தொங்கும்!
Vini Sharpana
 பிரபல எழுத்தாளர் ஜெயமோகனை எப்படி தாக்கலாம்?' என்று எரிமலை எப்படி பொறுக்கும் ரேஞ்சுக்கு கண்கள் சிவக்க கொந்தளித்துக்கொண்டிருப்பவர்கள் அவரால் அசிங்கப்படுத்தப்பட்டதாக, அவமானப்படுத்தப்பட்டதாக கதறும் பெண்மணியின் கருத்தை ஏற்க மறுக்கிறார்கள்.
இப்படி கொந்தளிப்பவர்களில் எத்தனை பேர் ஜெயமோகன் தாக்கப்பட்டதை நேரில் பார்த்தார்கள்? ஜெயமோகனின் வாக்குமூலத்தை நம்புகிறவர்கள்... கடைக்காரப் பெண்மணி கீதாவின் வாக்குமூலத்தை ஏன் நம்ப மறுக்கிறார்கள்? உண்மையிலேயே மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெறும் நிலையில் ஜெயமோகன் இருந்திருந்தால் முன்கூட்டியே ஏன் அட்மிட் ஆகவில்லை? கடைக்காரப் பெண்மணி அட்மிட் ஆனபிறகு 1 மணிநேரம் கழித்து அட்மிட் ஆனதன் பின்னணி என்ன?
எழுத்தாளர் ஜெயமோகனின் வாக்குமூலத்தை நம்புகிறவர்கள்... கடைக்காரப் பெண்மணி கீதாவின் வாக்குமூலத்தையும் ஆராய்ந்தறியுங்கள். பாமர மக்களுக்கு எழுத்தாளராக இருந்தாலும் கையெழுத்துப்போட தெரியாத கைநாட்டும் ஒன்றுதான். அவர்கள் என்ன ஜெமோவின் வாசகர்களா?
உள்ளூர் நூல்களிலிருந்து உலக நூல்கள்வரை வாசித்த எழுத்தாளர் குழாயடி சண்டைபோல் மாவை வீசி சண்டை போட்டிருக்காமல் பக்குவமாக நடந்துகொண்டிருந்தால் பிரச்சனை ஏற்பட்டிருக்காது. அவருடைய வாசிப்பு எளிய மனிதர்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற பக்குவத்தையும் நாகரீகத்தையும் வளர்க்கவில்லையே?

கருத்துகள் இல்லை: