சனி, 15 ஜூன், 2019

மம்தா பானர்ஜி : போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள்

போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள் -மம்தா பானர்ஜி!zeenews.india.com: போராட்டத்தில் ஈடுப்படும் மருத்துவர்கள் மீண்டும் பணியை தொடர வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். போராட்டத்தில் ஈடுப்படும் மருத்துவர்கள் மீண்டும் பணியை தொடர வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த 11-ஆம் தேதி மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், மருத்துவமனையில் பணியாற்றி வரும் 2 பயிற்சி மருத்துவர்களை கொடூரமாக தாக்கினர்.

இதனையடுத்து உறவினர்களின் இந்த தாக்குதலை கண்டித்து கடந்த 12-ஆம் தேதி முதல் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த முதல்வர் மம்தா பானர்ஜி, அவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். மேலும் மம்தாவின் இந்த நடவடிக்கை போராட்டக்காரர்களுக்கு ஆத்திரத்தை கொடுத்துள்ளது.
இதையடுத்து, அங்குள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் 300-க்கும் மேற்பட்ட மூத்த மருத்துவர்கள் தங்கள் பணியை ராஜினாமா செய்தனர்.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு, தங்களது 6 கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என மருத்துவர்கள் அறிவித்து உள்ளனர்.
இதற்கிடையில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் - பாஜக தொண்டர்கள் இடையே மோதல்கள் வலுத்துவருகிறது. இதன் எதிரொலியாக பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் தொடர்ந்துவரும் அரசியல் வன்முறை மற்றும் மருத்துவர்கள் போராட்டம் குறித்து தனித்தனியே விளக்கம் அளிக்குமாறு அம்மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் இன்று கடிதம் அனுப்பியுள்ளது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவிக்கையில்., "ஆயிரக்கணக்கான மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். அனைத்து மருத்துவர்களிடம் மீண்டும் பணியை தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.  ஜூன் 10-ஆம் தேதி நடைபெற்ற சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. நாங்கள் அது தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தி வருகிறோம்.
போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டு காயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவர்களின் அனைத்து செலவுகளை அரசு ஏற்றுக்கொள்ளும். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டுள்ளோம். 
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களிடம் பேசி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அமைச்சர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நேற்றும் இன்றும் சுமார் 5 மணி நேரம் காத்துக்கொண்டிருந்தனர்.  போராட்டக்குழுவினர் அங்கு அவர்களை சந்திக்க வரவில்லை.  நீங்கள் அரசியல் அமைப்புக்கு மரியாதை கொடுக்க வேண்டும்." என தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: